familiar actress met with an accident in kerala
பிரபல நடிகையான மேகா மேத்தியூஸ் விபத்தில் சிக்கிய சம்பவம் திரைத்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
மலையாள படத்தில் நடித்து வருபவர் பிரபல நடிகை மேகா மேத்தியூஸ். இவர் தற்போது நீரளி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
நீரளி படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, கொச்சி எர்ணாகுளம் சாலையில் காரில் சென்று கொண்டிருந்த மேகா, எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கினார்
தன் சகோதரியின் நிச்சயதார்த்தம்..!
தனது சகோதரியின் நிச்சய தார்த்தத்தில் கலந்துக்கொள்வதற்காக காரில் பயணம் செய்து உள்ளார் மேகா...
அப்போது மேகா சென்ற கார் மீது எதிரே வேகமாக வந்த கார் மோதியதில், கார் தலைக்கீழாக விழுந்துள்ளது.
இந்த விபத்தில் நடிகை மேகா15 நிமிடங்கள் காருக்குள்ளேயே மயங்கிய நிலையில் இருந்துள்ளதாக தெரிகிறது.
உதவிக்கு கூட யாரும் அருகில் இல்லையாம்...!
விபத்து நடந்து முடிந்து யாரும் அருகில் கூட செல்லாத நிலையில் ஒரு போட்டோகிராபர் நடிகையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளார்.

இது குறித்து விசாரணை நடத்தியதில், ஏர்பேக் அணிந்து இருந்ததால், அவர் உயிர் பிழைத்து உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது மேகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
