வேலவெட்டி இல்லாத வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினர் வலைதளங்களில் அடிக்கும் கூத்து எந்த அளவுக்கு எல்லையை மீறிப் போய்க்கொண்டிருக்கிறது என்பதற்கு உதாரணமாக இன்னும் கம்போசிங் கூட பண்ணப்படாத பாடல் ஒன்று வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

வேலவெட்டி இல்லாத வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினர் வலைதளங்களில் அடுக்கும் கூத்து எந்த அளவுக்கு எல்லையை மீறிப் போய்க்கொண்டிருக்கிறது என்பதற்கு உதாரணமாக இன்னும் கம்போசிங் கூட பண்ணப்படாத பாடல் ஒன்று வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம்’மாநாடு’. முதன்முறையாக வெங்கட் பிரபு சிம்பு படத்தை இயக்க உள்ளார். இதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். இப்படம் குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகி சில மாதங்கள் ஆகிவிட்டன.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில தினங்களில் பாண்டிச்சேர்யில் துவங்க உள்ள நிலையில், திடீரென்று இந்தப் படத்தில்டைட்டில் சாங்என்ற பெயரில் நேற்று சமூக வலைத்தளங்களில் ஒரு பாடல் வெளியானது. ’உனக்கு நா வேனா டி’என்ற அந்தப் பாடலை சிம்பு பாடி இருந்தார். அச்சு அசல் சிம்பு குரல் சாயலில் இப்பாடல் இருந்ததால் அது மாநாடுபடத்தின் பாடல்தான் என தகவல் கசிந்தது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பே இன்னும் தொடங்கவே இல்லை. இன்னும் இதற்கு யுவன் இசையமைக்கவே ஆரம்பிக்கவில்லை. அதை பற்றி ஒரு செய்தியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அப்படி இருக்கும் போது படத்தின் பாடல் எப்படி வெளியாகும் என சினிமா வட்டாரத்தினர் குழப்பத்தில் ஆழ்ந்தனர். மற்றவர்களை விட உச்சபட்ச குழப்பத்துக்கு ஆளான இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா,’இன்னும் கம்போஸிங்கே ஆரம்பிக்கலை. அதுக்குள்ள பாட்டை ரிலீஸ் பண்ணீட்டீங்களா பாஸ். சபாஷ்’ என்று நக்கலாக கமெண்ட் அடுத்துள்ளார்.