சின்னத்திரை நிலானி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு உத்வி இயக்குனரான லலித்குமார் கட்டாயப்படுத்துவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அவர் புகார் அளித்ததை தொடந்து லலித்குமார்   ரோட்டில் வைத்து தன் மீது பெட்ரோலை ஊற்றிக்கொண்டு நெருப்பை பற்ற வைத்து தற்கொலை செய்து கொண்டார். 

ஆரம்பத்தில் நிலானி கொடுத்த புகாரில் லலித்குமார் நிலானியை தொந்தரவு செய்வதாக தான் தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் லலித்குமார் தற்கொலை செய்துகொள்ளும் முன்னர் நிலானியுடன் தான் லிவிங் ரிலேஷனில் வாழ்ந்ததையும், தங்கள் அந்தரங்க புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார்.

இதனால் இந்த வழக்கு நிலனியின் பக்கம் திரும்ப தொடங்கியது. ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்று தனித்து வாழ்ந்து வரும் நிலானிக்கு லலித்குமார் தான் ஆரம்ப காலங்களில் உதவியதாக கூறப்படுகிறது. சமீபத்தில் வேலை இல்லாமல் லலித்குமார் இருந்ததும், நிலானிக்கு வேறு ஒரு நண்வர் கிடைத்ததால் தான் லலித்குமாரை ஒதுக்கிவிட்டார் என்றும் லலித்குமார் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் நிலானி லலித்குமாருடன் பேசிய தொலைபேசி உரையாடலின் ஆடியோ பதிவு ஒன்று சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த ஆடியோ பதிவில் நிலானியிடம் லலித்குமார் ஒரே ஒருமுறை ஜன்னல் அருகே வந்து நில் உன்னை பார்த்துவிட்டு போய்விடுகிறேன் என தெரிவித்திருக்கிறார். நிலானி முடியாது என மறுக்கவும், நீ என்னை பார்க்க வேண்டாம். கண்ணை மூடிக்கொள் நான் உன்னை பார்த்துவிட்டு போய்விடுகிறேன் என்றும் தெரிவித்திருக்கிறார். 

இல்லை என்றால் நான் வீட்டிற்கு வருவேன் என்றும் கூறி இருக்கிறார். அதற்கு நிலானி லலித்குமார் வீட்டுக்கு வந்தால் காலிங் பெல்லை அடித்தால், ஒவ்வொரு முறை காலிங் பெல் அடிக்கும் போதும் கையை பிளேடால் வெட்டிக்கொள்வேன். நீ தான் பிளேட் வாங்கி கொடுத்திருக்கியே  என கூறுவது போல அந்த ஆடியோ இருக்கிறது. அது மட்டுமல்லாமல் நிலானி தன்னுடைய கையை ஆழமாக வெட்டி கொண்டது போன்ற புகைப்படங்களும் கிடைத்திருக்கிறது. இந்த ஆதாரங்கள் நிலானி இந்த வழக்கில் இருந்து விடுபட உதவுமா? என்பது வழக்கு விசாரணையின் போது தான் தெரியவரும்.