erode magesh about the our first movie

சிவகார்த்திகேயன் பாணியை பின்பற்றியே தொடர்ந்து பல பிரபலங்கள், ஒரு தனியார் தொலைக்காட்சி மூலம் போட்டியாளராக அறிமுகம் கொடுத்து, பின் தொகுப்பாளர், காமெடியன் என படி படியாக முன்னேறி, தற்போது இணையதளம் படத்தில் இரண்டாவது நாயகனாக நடித்து வருகிறார் ஈரோடு மகேஷ்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தற்போது இந்த படம் குறித்து பேசியுள்ள மகேஷ் ... இந்த படத்தின் கதையை கேட்ட போது, தன்னுடைய தாயை சந்தித்து வந்த சந்தோசம் கிடைத்தாகவும், இந்த படத்தில் நடித்தது தனக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்ததாகவும் தெரிவித்தார்.

மேலும் இந்த படத்தில் தனக்கு இரண்டு லவ் சீன் உள்ளது என்றும், ஒரு ரொமான்டிக் பாடல் உள்ளது என்றும் தெரிவித்த அவர் தனக்கு ஜோடியாக கௌஷிகா என்கிற நாயகி நடிப்பதாக தெரிவித்தார்.

இந்த செய்தி தனக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்தாலும், இந்த செய்தியை கேள்விப்பட்டதும் தன்னுடைய மனைவி மிகுந்த கோபம் கொண்டதாக தெரிவித்தார்.