enquiry at varanasi court against kamal hassan
இந்து தீவிரவாதம் குறித்து நடிகர் கமலஹாசன் ஆன்ந்த விகடன் வாரப் பத்திரிகையில் தெரிவித்த கருத்துக்கு எதிராக வாரணாசி நீதிமன்றத்தில் வரும் 22 ஆம் தேதி விசாரணை நடத்தப்படுகிறது.
நடிகர் கமல் ஹாசன் ‘ஆனந்த விகடன்’ வாரபத்திரிகையில் ‘என்னுள் மையம் கொண்ட புயல்’ என்ற தொடரை எழுதி வருகிறார். அதில் இந்த வாரத்தில் குறிப்பிட்டுள்ளதில், “ இந்து தீவிரவாதம் இல்லை என கூறமுடியாது. இந்துவலதுசாரியினரும் வன்முறையில் ஈடுபட ஆரம்பித்துவிட்டனர். எங்கே ஓர் இந்துத் தீவிரவாதியைக் காட்டுங்கள் என்ற சவாலை இனி அவர்கள் விட முடியாது என்று அவர் எழுதியிருந்தார்.
நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த இந்த கருத்துக்கு எதிராக கமலேஷ் சந்திர திரிபாதி என்ற வக்கீல், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள கூடுதல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் புகார் மனு கொடுத்தார்.
அதில், கமல்ஹாசன் தெரிவித்த கருத்துகள் இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தி இருப்பதாகவும், எனவே அவர் இதுபோன்ற கருத்துகளை இனிமேல் தெரிவிக்க தடை விதிக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார்.
தனது மனு மீது வருகிற 22–ந் தேதி விசாரணை நடத்த நீதிமன்றம் முடிவு செய்து இருப்பதாக கமலேஷ் சந்திர திரிபாதி தெரிவித்துள்ளார்.
