ஆர்யா பங்கு பெற்ற 'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை யாரை ஆர்யா திருமணம் செய்துக்கொள்வார் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இப்படி பலரும் காத்திருந்த நிலையில், இவர்கள் யாரும் எதிபார்க்காத அதிர்ச்சி சம்பவம் தான் அங்கு அரங்கேறியது.

இந்த நிகழ்ச்சியின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு நேற்றைய தினம் முடிவடைந்தது. இந்நிலையில் இது குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலில் ஆர்யா... எந்த பெண்ணை தான் திருமணம் செய்ய உள்ளேன் என்பதை அறிவிக்க மேடைக்கு வந்துள்ளார். 

இவர் யாரை தேர்வு செய்வார் என பல்வேறு பிரபலங்கள் மற்றும் இந்த மூன்று பெண்களின் உறவினர்கள் அனைவரும் காத்திருந்த நிலையில், "இந்த மூன்று பெண்களும் தனக்கு பொருத்தமான பெண்கள் என்றும், இவர்களை வெளியேற்ற தனக்கு மனதில்லை, மேலும் இவர்களில் ஒருவரை தேர்வு செய்தால் அது மற்றவர்களுக்கு வலியை கொடுக்கும் என கூறி இவர்கள் மூன்று பேரையும் திருமணம் செய்துக்கொள்ள போவதில்லை என அறிவித்தார். 

ஆர்யாவிடம் இருந்து இப்படி ஒரு பதிலை சற்றும் எதிர்பார்க்காத பிரபலங்கள் முதல் குடும்பத்தினர் என அனைவரும் அதிர்ச்சியில் மூழ்கினர். இப்படி ஆர்யா கூறுவார் என சற்றும் எதிர்பாராத மூன்று பெண்களும் கண்களில் கண்ணீரோடு மேடையில் நின்றனர்.