பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஆர்யாவிற்கு பெண் தேடும் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது. 

இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 16 பெண்கள் போட்டியாளராக கலந்துக்கொண்டனர். ஆனால் ஒரு சில கருத்துக்கள் ஆர்யாவிற்க்கும், சில பெண்களுக்கும் ஒற்றுப் போகததால், முதல் வாரத்தில் இரண்டு பெண்களும் இரண்டாவது வாரத்தில் இரண்டு பெண்களும் இந்த நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டனர். ஒருபெண் தன்னுடைய தாத்தா திடீர் என இறந்து விட்டதால் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இதனால் தற்போது 11 பெண்களுடன் இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

 

இந்த 11 பெண்களும் எப்படியும் ஆர்யாவை கவர்ந்து திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என தீவிமாக உள்ளனர். 

இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டுள்ள போட்டியாளர்களில் ஒருவர் 'சீதாலட்சுமி' இவர் தன்னுடைய வாழ்கையில் நடந்த மிக கொடூரமான சம்பவத்தை ஆர்யாவிடம் கூறியுள்ளார்.

அவர் கூறியது... 'நான் என் பெற்றோருக்கு மிகவும் தாமதமாக பிறந்த மகள், எனக்கும் என் சகோதருக்கும் 8 வயது வித்தியாசம் உள்ளது. 

நான் 12 ஆம் வகுப்பு படிக்கும்போது என்னுடன் ஒரு பெண் தோழி இருந்தால். சில காலம் நல்ல நட்பாக பழகி வந்த அவர் ஒரு நாள் என்னுடன் தவறாக நடக்க முற்பட்டாள், இதனால் நான் மிகவும் மனமுடைந்து மன அழுத்தத்தில்  இருந்தேன். இது குறித்து குடும்பத்தினரிடமும் சொல்ல சிரமப்பட்டேன் என கூறினார். 

இதை கேட்டதும் ஆர்யா அவருக்கு என்ன பதில் சொல்வது அவரை எப்படி சமாதானம் செய்வது என தெரியாமல் ஒரு நிமிடம் ஆடிப்போய்விட்டார்.