Asianet News TamilAsianet News Tamil

மிக விரைவில்... அடுத்த சில தினங்களில்...தேதியே தெரியாமல் ‘எ.நோ.பா.தோட்டா’தயாரிப்பாளர் வெளியிட்ட அறிக்கை...

தனுஷின் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போனதால் அதிருப்தி அடைந்த ரசிகர்களுக்கு தயாரிப்பாளர்  பி.மதன் விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அடுத்த ரிலீஸ் தேதி என்ன என்பது பற்றிய தகவல் இல்லாததால்தனுஷ் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர்.

enai nokki paayum thotta producers press release
Author
Chennai, First Published Sep 6, 2019, 11:00 AM IST

தனுஷின் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போனதால் அதிருப்தி அடைந்த ரசிகர்களுக்கு தயாரிப்பாளர்  பி.மதன் விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அடுத்த ரிலீஸ் தேதி என்ன என்பது பற்றிய தகவல் இல்லாததால்தனுஷ் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர்.enai nokki paayum thotta producers press release

கடந்த பிப்ரவரி 2016ம் ஆண்டு துவங்கப்பட்ட எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனத்தால் துவங்கப்பட்ட படம் ‘எனை நோக்கிப்பாயும் தோட்டா’.அந்நிறுவனத்தின் வேறு சில தயாரிப்புகள் தோல்வி அடைந்ததால் ‘எ.நோ.பா.தோட்டா’ பெரும் சிக்கலில் மாட்டியது. இந்த ஒரு ஆண்டில் மட்டும் சுமார் ஒரு டஜன் ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு கடைசி நிமிடங்களில் பின்வாங்கப்பட்டன.  இந்நிலையில் மிகவும் உறுதியாக அறிவிக்கப்பட்ட இன்றைய ரிலீஸும் தள்ளிப்போகவே தயாரிப்பாளர் மதன் ஒரு விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்,...செப்டம்பர் 6 அன்று வெளியாகவிருந்த ’எனை நோக்கிப் பாயும் தோட்டா’ படத்தை எங்களால் வெளியிட முடியவில்லை. பெரு முயற்சிகள் பல செய்து இத்திரைப்படத்தை வெளியிட முடியும் என்ற உறுதியோடு பணிபுரிந்த எங்களுக்கும் இது பெரிய ஏமாற்றமாக உணர்ந்து வருந்துகிறோம். .மிக விரைவில் அடுத்த சில தினங்களில் வெளியிட மேலும் உழைத்துக்கொண்டிருகிறோம்.enai nokki paayum thotta producers press release

இது நீண்ட பெரும் பயணம். நாங்கள் அறிவோம். மறுக்கவில்லை.இதில் ஏற்படும் தாமதத்தினால் உங்களுக்கு ஏற்படும் ஏமாற்றம் விரக்தியையும் அதன் காரணமாக நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளையும் நாங்கள் அறிவோம்.உங்கள் கருத்துகளையும் கருத்தில் கொண்டே எங்கள் பயணமும் அமைந்துள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.ஆனால் இலக்கை எட்டும் நிலையில் நாங்கள் வேண்டுவது உங்கள் அன்பும் ஆதரவும் மட்டுமே.இந்த நிலையில் நீங்கள் பொறுமையுடன் எங்களையும் இந்தத் திரைப்படத்தையும் ஆதரிக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இத்திரைப்படத்தை திரையரங்கில் நீங்கள் பார்க்கும்போது உங்கள் இத்தனை காத்திருப்புக்கும் இப்படைப்பு நியாயம் செய்யும் என உளமார நம்புகிறோம்’என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios