தனது செல்ல மகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை மட்டுமே இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்த எமி ஜாக்சன், ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு... சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகும் ஸ்டைலிஷ் போட்டோஸ்... மம்மியான பிறகும் கெத்து காட்டும் எமி...!

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

வழக்கமாக தமிழ் சினிமாவில் திருமணத்திற்கு பிறகு நடிகைகள் நடிப்பது என்பதே அரிதான ஒன்று. அதுவும் மம்மியான பிறகு ஹீரோவின் அண்ணி, அக்கா, அம்மா கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைக்கும். அதனால் தான் நிறைய நடிகைகள் தங்களது காதல் விவகாரத்தை கூட வெளியில் தெரியாமல் மிக ரகசியமாக பாதுகாப்பார்கள். ஆனால் இதை எல்லாம் ஆரம்பம் முதலே உடைத்து வந்தவர் எமி ஜாக்சன். மதாரசப்பட்டினம் படத்தை தொடர்ந்து விஜய்யுடன் தெறி, தனுஷ் உடன் தங்க மகன், விக்ரமின் ஐ, ரஜினியின் 2.O உள்ளிட்ட படங்களில் ஹிட் படங்களில் நடித்தவர் எமி ஜாக்சன். 

ஜார்ஜ் பெனாய்டோ என்பவரை காதலித்து வந்த எமி ஜாக்சன், அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை எவ்வித ஒளிவு மறைவும் இன்றி சோசியல் மீடியாவில் பரவவிட்டார். தான் கர்ப்பம் அடைந்த செய்தியையும் சகஜமாக ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். எமியின் பிரக்னன்ஸி பெல்லி போட்டோஸ் சோசியல் மீடியாவில் செம வைரலானது. அதன் பின்னர் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக, மருத்துவமனையில் குழந்தை மற்றும் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை எமி வெளியிட, ரசிகர்கள் செம குஷியாகினர். இன்ஸ்டாகிராம் பதிவைப் பார்த்த திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் எமிக்கு வாழ்த்து கூறினர். 

குழந்தை பிறப்பதற்கு முன்பே, தனக்கு ஆண் குழந்தை பிறக்கப் போவது ஆண் குழந்தை தான் என்றும், அக்குழந்தைக்கு ஆண்ட்ரிஸ் என பெயரிட உள்ளதாகவும் பதிவிட, அது சோசியல் மீடியாவின் ஹாட் டாக்கானது. அதன் பின்னர் தனது செல்ல மகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை மட்டுமே இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்த எமி ஜாக்சன், ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். நல்ல அம்மாவாக அன்பு மகனை கவனித்து வந்த எமி ஜாக்சன், தற்போது தனது ஸ்டைலிஷ் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திண்டாட வைத்துள்ளார். குழந்தை வளர்ப்பில் பிஸியாக இருந்த எமி ஜாக்சன், தான் மீண்டும் களத்தில் இறங்க தயார் என்பது போல் இன்ஸ்டாவில் போட்டுள்ள போட்டோஸ் ரசிகர்களை செம குஷியாக்கியுள்ளது.