தமிழகம் மற்றும் புதுவையில்,  நாளை மறுநாள் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது.  இதனால் கடைசி நாளான இன்று அனைத்து கட்சிகளும் பரபரப்பான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

தமிழகம் மற்றும் புதுவையில், நாளை மறுநாள் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் கடைசி நாளான இன்று அனைத்து கட்சிகளும் பரபரப்பான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதேபோல் வாக்குக்கு பணம் கொடுப்பதை தடுக்க, பறக்கும் படையினரும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய ரசீது இல்லாமல், ரூ.50 ஆயிரத்திற்கு மேல் கொண்டு செல்லப்படும் பணம், நகை, பரிசுப் பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

உரிய ஆதாரம் காட்டிய பிறகே உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் நடவடிக்கைகளும் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் யாருக்கு வாக்களிப்பது என ஒரு தரப்பினர் முடிவு செய்திருந்தாலும், மற்றொரு தரப்பினர் சற்று குழப்பமான மனநிலையுடனே உள்ளனர்.

இந்நிலையில் பிரபல நடிகரும் சமூக சேவகருமான பார்த்திபன் தன்னுடைய ஓட்டு யாருக்கு என்பது குறித்து வெளிப்படையாக கூறியுள்ளார். இது குறித்து அவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள பதிவில்....

ஓட்டைப் போடாதீர்கள்
ஓட்டைப் போடாதீர்கள்
வல்லரசாகப் போகும்
இந்தியாவின் கூகுள்
வரைபடத்தில்
ஓட்டைப் போடாதீர்கள்
தேர்தல் வந்துடுச்சி
துட்டுக்கு ஓட்டைப்போட்டு
நம் பிள்ளைகளின்
ஆரோக்கிய வாழ்வில்
(Scan report-டில்)
ஓட்டைப் போடாதீர்கள் என கூறியுள்ளார். இந்த ட்விட்டிக்கு பலர் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.

Scroll to load tweet…