editor pravin slams private channel

அஜித் ரசிகர்கள் பல நாட்களாக காத்திருந்த விவேகம் படத்தின்டீசர் சமீபத்தில், வெளிவந்தது. 

இந்த செய்தி அஜித் ரசிகர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்தாலும், டீசர் வெளியாவதற்கு அரை மணிநேரத்திற்கு முன்பே வாட்ஸ் ஆப்களில் வெளியானதால் பலர் அதிர்ச்சியாகினர்.

இது குறித்து பிரபல ஊடகம் ஒன்று, இது குறித்து செய்தி வெளியிட்டபோது , விவேகம் டீசர் குறிப்பிட்ட சில மணி நேரத்திற்கு முன்பு வெளிவர காரணம், விவேகம் படத்தின் எடிட்டரான "அந்தோணி எல் ரூபன்" என சித்தரித்து ஒரு செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த ஊடகத்திற்கு பதிலடி கொடுத்துள்ள, எடிட்டர் அந்தோணி எல் ரூபன், என்னை பற்றி வீணாக அவதூறு பரப்பும் செயலில் ஈடுபட்டாலோ, அல்லது தன்னுடைய பெயருக்கு களங்கம் விளைவித்தாலோ மான நஷ்ட வழக்கு தொடர்வேன் என கூறியுள்ளார். 

இதனை அறிந்த அந்த பிரபல ஊடகம் உடனே தன்னுடைய தவறை உணர்ந்து, அவரிடம் மன்னிப்பு கேட்டது என்பது குறிப்பிடத்தக்கது.