இப்ப வாங்க டா பார்க்கலாம்...படுத்தாதான் பட வாய்ப்பா..? ஆடி அடங்கி போன தெலுங்கு  நடிகர் சங்கம்..!

தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டியால் தெலுங்கு திரைஉலகினரேமிரண்டு போய் உள்ளனர்.

தனக்கு நடிக்கவாய்ப்பு தருவதாக இயக்குனர்களும் தயாரிபாளர்களும், நடிகர்களும் பாலியல் தொல்லை கொடுத்து வாழ்கையை நாசம் செய்து விட்டதாக ஸ்ரீ ரெட்டி தொடர் புகார் தெரிவித்து வந்தார்.

முகநூல் பக்கத்தில் கூட ஸ்ரீ லீக்ஸ் என்ற பெயரில், அவர்களின் பெயர்களையும், புகை படத்தையும் செல்போன் குறுந்தகவல்களையும் ஆதாரத்தோடு வெளியிட்டு வந்தார்

உண்மையை உரக்க சொன்னதற்காக, ஸ்ரீ ரெட்டியுடன் இனி யாரும் நடிக்க கூடாது என   தெலுங்கு நடிகர் சங்கம் தெரிவித்து இருந்தது

அதே வேளையில்,மகளிர் அமைப்புகள் மற்றும் மாணவர்களும் ஆதரவு தெரிவித்து வந்தனர் ஸ்ரீ ரெட்டிக்கு....

இந்த நிலையில், இது குறித்து விளக்கம் கேட்டு மனித உரிமை ஆணையம் தெலுங்கானா  அரசுக்கும், மத்திய செய்தி ஒளிபரப்பு துறைக்கும் நோடீஸ் அனுப்பியது

நடிகையை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதும், நடிக்க தடை போடுவதும் தனி மனித உரிமையை மறுப்பது என ஸ்ரீ ரெட்டிக்கு சாதகமாக மனித உரிமை ஆணையம் தெரிவித்து 4 வாரத்திற்குள் பதில் அளிக்குமாறு கேட்டுக்கொண்டது.

இதனை தொடர்ந்து ஸ்ரீ ரெட்டியுடன் நடிக்க விதித்து இருந்த தடையை உடனடியாக  நீக்கிய தெலுங்கு நடிகர் சங்கம்

சங்கத்தில் உள்ள 900 உறுப்பினர்களுடன் ஸ்ரீ ரெட்டி நடிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் பாலியல் புகார் குறித்து, விசாரிக்க  20  பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்படும் என  தெலுங்கு பிலிம் சேம்பர் அறிவித்து உள்ளது

இதன் மூலம் ஸ்ரீ ரெட்டி விவகாரம் சூடு பிடித்துள்ளது.மேலும் இதன் மூலம் ஸ்ரீ ரெட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் விரைவில் கைதாக கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது