drug checiking for santosh narayanan

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் இசையமைத்திருந்தாலும் மிக விரைவில் பிரபலமான இசையமைப்பாளராக அனைவராலும் அறியப்பட்டவர் சந்தோஷ் நாராயணன்.

இவர் தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிப் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். 

இந்நிலையில் ஒரு நிகழ்ச்சிக்காக தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகருக்குச் சென்றுள்ளார். இவர் தோற்றத்தைப் பார்த்து ஆஸ்திரேலிய விமான அதிகாரிகள் இவர் போதை மருந்து கடத்தி வந்தவரா என தனியாக அழைத்து சோதனை செய்துள்ளனர்.

மேலும் இப்படி எட்டாவது முறையாக தனக்கு சோதனை நடப்பதாக சந்தோஷ் நாராயணன் தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதே போல ஒருவரின் தோற்றத்தை வைத்து யாரையும் எடை போட வேண்டாம் எனறும் வருத்தத்துடன் கூறியுள்ளார்.

Scroll to load tweet…