பழைய வண்ணாரப் பேட்டை இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் அடுத்து வெளியான படம் திரெளபதி. அஜித் மச்சான் ரிச்சர்ட் ரிஷி நடித்துள்ள இந்த படம் கடந்த மாதம் 28ம் தேதி வெளியான போது, தியேட்டர்களில் தடபுடலான வரவேற்பு கொடுக்கப்பட்டது. 

தமிழகத்தில் 330 தியேட்டர்களில் வெளியான படம் வசூலில் வேற லெவலில் மாஸ் காட்டி வருகிறது. நாடக காதல் குறித்து வெளிப்படையாக கருத்து கூறியதால் படம் சில சமூகத்தினரிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாக தெரிகிறது. அதனால் படத்தை குடும்பம், குடும்பமாக பார்க்க வரும் ரசிகர்களின் கூட்டம் சரளமாக அதிகரித்து வருகிறது. 

இந்த படம் வெளியாகி 11 நாட்கள் கடந்துள்ள நிலையில் இதுவரை 13.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே படம் நன்றாக ஓடும் குஷியில் இருந்த மோகன் ஜி, மூடர் கூடம் இயக்குநர் நவீனை டுவிட்டரில் வாண்டடாக வம்பிழுந்தார். மேலும் திரெளபதி படத்திற்கு குறைவான மதிப்பெண் கொடுத்துவிட்டதாக பிரபல வார இதழையும் கழுவி, கழுவி ஊத்தினர். 

இதையும் படிங்க: தோழியிடம் அத்துமீறிய அமலா பால்... கண்ட இடத்தில் கைவைத்து சில்மிஷம்... முகம் சுழிக்க வைக்கும் ஆபாச நடனம்...!

இது எல்லாம் போதாது என்று திரெளபதி படத்தின் வெற்றியை கொண்டாடுவதற்காக போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 2020ம் ஆண்டின் முதல் பிளாக்பஸ்டர் திரெளபதி என்று அச்சிடப்பட்டுள்ளது. இந்த பதிவைப் பார்த்த முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் செம்ம கடுப்பில் உள்ளனர். இதுவரை ட்விட்டரில் பதிவிட்டு வந்ததை போஸ்டாராகவே வெளியிட்டு அனைவரையும் வெறுப்பேற்றி இருக்கிறார் இயக்குநர் மோகன் ஜி. 

இதையும் படிங்க: அப்பா, அம்மாவையே மிஞ்சிய குட்டி தங்கங்கள்... வைரலாகும் தல அஜித்தின் குடும்ப புகைப்படம்...!

இதற்கு முன்னதாக சூப்பர் ஸ்டாரின் தர்பார், அவரது மருமகன் தனுஷின் நடிப்பில் வெளியான பட்டாஸ் ஆகிய திரைப்படங்கள் இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே வெளியாகின. தர்பார் வசூல் சரியாக இல்லை என ஒரு சில விநியோகஸ்தர்கள் கூறினாலும், தியேட்டர் உரிமையாளர்கள் பலரும் அதை ஒத்துக்கொள்ள தயாராக இல்லை. 

இதையும் படிங்க: ரஜினி தலைக்கு மேல் தொங்கும் கத்தி.... இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தீர்ப்பு...!

இந்நிலையில் மோகன் ஜி வெளியிட்டுள்ள இந்த பதிவு சூப்பர் ஸ்டாரின் தர்பார் படத்தை நேரடியாக கிண்டல் செய்வது போல் உள்ளதாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர். இந்த போஸ்டரை அவர் தனது 4ம் ஆண்டு திருமண நாளான நேற்று வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.