அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அறிவிப்புகள் காரணமாக அமெரிக்காவில் படமாக்க திட்டமிட்டிருந்த கோலிவுட் திரையுலகினர் பலர் தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொண்டு வேறு நாடுகளை படமெடுக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக முதல்கட்ட படப்பிடிப்பை அமெரிக்காவில் முடித்துவிட்ட கமல்ஹாசனின் 'சபாஷ் நாயுடு', அமெரிக்காவில் பெரும்பான்மையான காட்சிகளை படமாக்க திட்டமிட்டிருந்த இளையதளபதி விஜய்யின் 'விஜய் 61', கவுதம் மேனனின் ஆஸ்தான லொகேஷன் ஆன அமெரிக்காவில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் விக்ரம் நடிக்கும் 'துருவ நட்சத்திரம்', தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள படம் உள்பட ஒருசில கோலிவுட் படங்களின் படப்பிடிப்பு வேறு நாடுகளில் நடைபெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
