கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 குறிப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த தருணத்தில் மேலும் வலுசேர்க்கும் விதமாக மீண்டும் உள்ளே நுழைந்து உள்ளார் வனிதா.

இதற்கு முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கஸ்தூரி பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். பின்னர் தற்போது அவருக்கு இணையாகவும் போட்டியாகவும் வனிதாவை மீண்டும் களமிறக்கி உள்ளது பிக்பாஸ் டீம்.  

எந்த காரணத்திற்காக வனிதாவை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி விட்டார்களோ அந்த காரியம் சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகிறது. அதற்கு உதாரணம் உள்ளே சென்ற ஒரே நாளில் அபிராமிக்கு முகேனுக்கும் அடிதடி சண்டை வரை கொண்டு சென்று விட்டது. இதற்கு முன்னதாக அபிராமிக்கு முகேனுக்கும் என்ன என்பது குறித்து அபிராமியிடம் தனியாக அமர்ந்து பேசுகிறார் வனிதா. 

அப்போது, "உனக்கு வெளியில் என்ன நடக்கிறது என்பது பற்றி கவலையே இல்லை.. பெரிய ப்ராஜெக்டில் நடித்து இருக்கிறாய். இந்த நேரத்தில் நீ எப்போது வெளியே வருவாய் என மற்றவர்கள் காத்திருக்க வேண்டும். இதுபோன்ற ஒரு தருணத்தை உருவாக்குவதற்கு பதிலாக இன்று பிக்பாஸ் வீட்டுக்குள் நீ ஜீரோவாக இருக்கிறாய்.. அவன் ஹீரோ ஆயிட்டான், ஒருவேளை அவனும் உன்னை பிடிக்கும் என்று தெரிவித்து இருந்தால் பிரச்சனையே இல்லை... ஆனால் அவன் ஒதுங்கி ஒதுங்கி செல்கிறான்... நீதான் பின்னாடி செல்கிறாய். உனக்கு அசிங்கமே கிடையாதா? என பல்வேறு கேள்விகளை முன்வைத்து டார் டாராக கிழித்து தொங்கவிட்டார் வனிதா.