பிக்பாஸ் தமிழ் சீசன் 2 நிகழ்ச்சியில், கலந்து கொண்டுள்ள மிகவும் குறைவான வயதுடைய போட்டியாளர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் நடிகர் கெளதம் கார்த்தி நடித்து வெளியான அடல்ட் காமெடி படமான 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தில் செக்ஸியான பேய்யாக நடித்து பிரபலமானவர்.

 

இந்நிலையில் இவருடைய அம்மா கொடுத்துள்ள ஒரு பேட்டியில், "என் மகள் யாஷிகா எலிமிநேஷன் லிஸ்டில் இடம்பெற்றால் அவருக்கு யாரும் ஓட்டு போடாதீர்கள் ப்ளீஸ் "அவர் சீக்கிரம் வீட்டுக்கு வர வேண்டும். இதனால் தன்னுடைய உறவினர்களிடம் கூட நான் அவருக்கு யாரும் ஓட்டு போட்டு காப்பாற்ற வேண்டாம் என கூறி வருவதாக கூறியுள்ளார்.

மேலும் யாஷிகா பற்றி கூறியுள்ள இவர், "யாஷிகா அனைவருடனும் மிகவும் சகஜமாக பழகும் குணம் உடையவர். அவருக்கு சண்டை போட்டால் சுத்தமாக பிடிக்காது. அதனால் தான் கமல் சார் வரும் போது அவர் எதுவும் பேச மாட்டார் மிகவும் அமைதியாகவே இருப்பார் என்றும் யாஷிகாவிற்கு காதலன் யாரும் இல்லை என்கிற தகவலையும் அவருடைய அம்மா தெரிவித்துள்ளார்.