இன்று 'வலிமை' படத்தின் வில்லன் கார்த்திகேயாவின் பிறந்தநாளை முன்னிட்டு புதிய போஸ்டர் ஒன்று வெளியான நிலையில், அஜித்தின் ரசிகர்கள் அதை சமூக வலைத்தளத்தில் செம்ம ட்ரெண்ட் செய்து, கார்திகேயவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். 

இன்று 'வலிமை' படத்தின் வில்லன் கார்த்திகேயாவின் பிறந்தநாளை முன்னிட்டு புதிய போஸ்டர் ஒன்று வெளியான நிலையில், அஜித்தின் ரசிகர்கள் அதை சமூக வலைத்தளத்தில் செம்ம ட்ரெண்ட் செய்து, கார்திகேயவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

'நேர்கொண்ட பார்வை' படத்திற்கு பின்னர் அஜித், இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு, ரசிகர்களுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் இன்றைய தினம் கண்டிப்பாக படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட உள்ளதாக சில நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியான நிலையில், அனைவரது யூகத்தின் அடிப்படையில், வில்லன் நடிகர் கார்த்திக்கேயாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக புதிய போஸ்டர் ஒன்று வெளியானது.

இதில் பார்ப்பதற்கே மிகவும் ஸ்டைலிஷ் வில்லனாக கார்த்திகேயா இருந்தார். அஜித்தின் ரசிகர்களும், கார்த்திகேயாவிற்கு தங்களது வாழ்த்துக்களை கூறியது மட்டும் இன்றி, போஸ்டரை தாறுமாறாக வைரலாகினர்.

சரி இன்று வெளியான இந்த போஸ்டரில் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி இருந்ததை பலரும் கவனித்திருக்க கூடும், அதாவது... வலிமை படம் திரையரங்கில் வெளியானாலும், திரையரங்கில் வெளியான பின்னர் zee ஓடிடி தளத்தில் வெளியிடும் என்பதை குறிக்கும் விதமாக, இந்த படத்தின் போஸ்டரில் ஜீ குறியீடு வெளியாகியுள்ளது. தீபாவளிக்கு வலிமை திரைப்படம் வெளியாகும் என கூறப்பட்டு வந்தாலும், இதுவரை உறுதியான தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Scroll to load tweet…