Do you know who plays in the Tamil remake of the movie queen

இந்தியில் சக்கப்போடு போட்ட “குயின்” படத்தின் தமிழ் ரீமேக்கில்வ் காஜல் அகர்வால் நடிக்கிறார்.

இந்தியில் பிரபலாமான “குயின்” படத்தைத் தமிழில் “பாரீஸ் பாரீஸ்” என ரீமேக் செய்து வெளியிடுவதற்கான பிரஸ் மீட் நிகழ்ச்சியில் இயக்குனர் ரமேஷ் அரவிந்த் பேசினார்.

“குயின் படம் இயல்பான படம் போல இல்லை. காதல் தோல்வியடைந்த ஒரு பெண், தன் வாழ்க்கையில் அடுத்தடுத்த கட்டங்களுக்கு எப்படி தன்னை மாற்றிக் கொண்டு செல்கிறாள்? அவளின் சிந்தனை எப்படி இருக்கிறது? என்பதை கருவாக கொண்டது.

இந்தியில் உருவான இந்தபடம், தமிழில் காஜல் அகர்வாலின் நடிப்பில் உருவாகிறது.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்தப் படத்திற்கு ஹீரோவை தேர்ந்தெடுப்பது என்றால் எளிதான காரியம் இல்லை. அப்படி என் நினைவுக்கு வந்தவர் தான் சசி வருண்.

சசி பல கன்னட, தமிழ் படங்களில் நடித்தவர். அவர் பல விளம்பர படங்களிலும் நடித்தவர். அவரை ஒரு இடுப்பு வலி மருந்துக்கான விளம்பரத்திற்கு நடிக்க வைக்க பார்க்கச் சென்றபோது, முதலில் வருணின் இடுப்பை தான் பார்த்தேன். அவரின் இடுப்பை பார்த்த பின்னர் தான் அவரின் முகத்தையே பார்த்தேன்.

இப்படி எனக்கு என்ன தேவையோ அதைப் பார்ப்பதால், படத்திற்கு என்ன தேவையோ அதை நான் தருவேன் என்று தயாரிப்பாளர் என் மீது நம்பிக்கை வைத்துள்ளார்” என்று தெரிவித்து உள்ளார்.