'நிசமாத்தான் சொல்லுறியா?' என க்யூட் ஸ்மைலால் ரசிகர்களை கவர்ந்த குழந்தை நட்சத்திரம், இன்று இளம் ஹீரோயினாக வலம் வருகிறார். 

ராம் இயக்கத்தில் வெளியான ஜீவா, அஞ்சலி நடிப்பில் வெளியான கற்றது தமிழ் படம் 2007ம் ஆண்டு வெளியானது. வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெறாவிட்டாலும், விமர்சனங்கள் ரீதியாக இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சின்ன வயது அஞ்சலியாக நடித்தவர் வெண்பா. 'நிசமாத்தான் சொல்லுறியா?' என க்யூட் ஸ்மைலால் ரசிகர்களை கவர்ந்த குழந்தை நட்சத்திரம், இன்று இளம் ஹீரோயினாக வலம் வருகிறார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கடந்த ஜனவரி 31ம் தேதி திரைக்கு வந்த மாயநதி திரைப்படம் மக்களின் ஆதரவுடன் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. மாயநதி படத்தில் நாயகியாக நடித்துள்ள வெண்பாவுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. அபி சரவணனுக்கு ஜோடியாக காதல் காட்சிகளில் அசால்ட் செய்திருக்கும் வெண்பா இளம் ரசிகர்களை சுண்டி இழுந்துள்ளார். 

பள்ளிப்படிப்பில் காதல் ஏற்பட்டால் அது மாணவியின் எதிர்காலத்தை எவ்வாறு பாதிக்கும், அப்போது பெற்றோர் எவ்வாறு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ள மாயநதி, பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. 

காதல் கசக்குதய்யா என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகியிருந்தாலும், மாயநதி படம் தான் வெண்பாவிற்கு நல்ல பெயரையும், ஏகோபித்த வரவேற்பையும் கொடுத்துள்ளது. சூர்யாவுடன் கஜினி, விஷாலுடன் சத்யம், விஜய்யின் சிவகாசி ஆகிய படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தியுள்ளார் வெண்பா.