ரஜினி நடிக்கும் ‘காலா’ படத்தில் காலவுக்கு வலது கையே சமுத்திரக்கனி தானாம்.

நடிகர் சமுத்திரக்கனி ‘தொண்டன்’ படத்தை அடுத்து ‘ஆண் தேவதை’, ‘பெட்டிக் கடை இன்று விடுமுறை’ உட்பட பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

மேலும், ‘காலா’, ‘பேரன்பு’, ‘மதுரை வீரன்’, ‘ஆகாச மிட்டாய்’ உள்பட பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ரஜினி நடிக்கும் ‘காலா’ படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்கிறாராம். “காலா” படத்தில் சமுத்திரக்கனி, ரஜினியுடன் படம் முழுவதும் வருவாராம். அந்த வகையில், கதைப்படி ரஜினியின் வலது கை போன்ற ஒரு வேடத்தில் சமுத்திரகனி நடித்திருக்கிறாராம்.

மேலும், ‘காலா’ படத்திற்கு கேட்ட நேரத்தில் கால்சீட் கொடுக்க வேண்டும் என்பதால், ஏற்கனவே தான் நடித்து வந்த கம்பெனிகளிடம் கொடுத்த கால்சீட் திருப்பி வாங்கியவர், இப்போது “காலா” படப்பிடிப்பு இல்லாத நாட்களில் மற்ற படங்களுக்கு நடித்து வருகிறாராம்.