சின்னத்திரையில், தொகுப்பாளராக அறிமுகமாகி, பின் சீரியல் மற்றும் பல படங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்து பிரபலமானவர் காஜல் பசுபதி. தற்போது இவருடைய முன்னாள் கணவர் சாண்டி, பிக்பாஸ் சீசன் 3 ,  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். இதனால் சாண்டி குறித்து பலர் தொடர்ந்து காஜலிடம் பேட்டி எடுத்து வருகிறார்கள். காஜலும் தன்னுடைய முழு ஆதரவை சாண்டிக்கு கொடுத்து வருகிறார்.

காஜலிடம் இருந்து விவாகரத்து பெற்று தற்போது சாண்டி, இரண்டாவதாக சில்வியா என்கிற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு அழகான பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. சமீபத்தில் கூட சாண்டியின் குழந்தையை காஜல் நேரில் சந்தித்த புகைப்படங்களை வெளிட்டு தன்னுடைய சதோஷத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சாண்டி கண்டிப்பாக வெற்றி பெறுவார் என்கிற நம்பிக்கை தனக்கு உள்ளதாகவும் கூறி வருகிறார். இப்போது சாண்டி முதல் முறையாக, எவிக்ஷன் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். சாண்டிக்கு ரசிகர்களும் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருவதால், அதனை வரவேற்பது போல் காஜல் பசுபதி ட்விட் ஒன்றை போட்டார்.

இதனை பார்த்த ரசிகர் ஒருவர், "உன்ன குப்பை மாதிரி தூக்கி எறிந்த சாண்டிக்கு, கூஜா தூக்கிட்டு திரியுற என்று பதிவிட்டார். இந்த ட்விட்டை பார்த்து மிகவும் கோபமான காஜல், சாண்டி தன்னை குப்பை மாதிரி தூக்கி இருந்ததை நீ பார்த்தியா..? உன் அளவுக்கு கீழ் தனமா இறங்கி பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. தங்களுக்குள் பரஸ்பர பிரிவு தான் இருந்தது என்பதை தெளிவு படுத்தி அதிரடி பதில் கொடுத்தார்.