disco shanthi brother daughter is escape

சென்னை தியாகராய நகரில் வசித்து வரும்,நடிகை டிஸ்கோ சாந்தி மற்றும் நடிகை லலிதாகுமாரியின் சகோதரன் அருண் மொழி வர்மன். இவர் சினிமா உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவருக்கு செரில் என்கிற மனைவி உள்ளார்.

இவர்களது மூத்த மகள் அப்ரீனா சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் (+2) வகுப்பு படிக்கிறார், 17 வயதாகும் இவர் கடந்த 6ஆம் தேதி பள்ளிக்கு சென்று மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதனையடுத்து அபரீனாவின் பெற்றோர் பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் தொடர்ந்து 5 நாட்கள் போலீசார் அவரை தேடியும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

அபரீனா படிக்கும் தனியார் பள்ளியில் இது குறித்து விசாரித்த போது பள்ளியில் மொத்தம் 56 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் அப்ரினா வகுப்பு அருகே பொருத்தப்பட்ட கேமராக்கள் வேலை செய்யவில்லை என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் காவல் துறைக்கும் போதிய ஆதாரங்கள் பள்ளி அலுவலகத்திலிருந்து கிடைக்கவில்லை. பள்ளி நிர்வாகம் மெத்தனம் காட்டுவது போல் தோன்றுகிறது. எனவே இந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஊடகங்கள் மூலம் என் அண்ணன் மகள் அப்ரீனா கிடைப்பால் என்ற நம்பிக்கை இருக்கிறது என கூறி நடிகைகள் டிஸ்கோ சாந்தி மற்றும் லலிதா குமாரி ஆகியோர் பத்திரிகையாளர்களிடம் அழுது கதறினர்.