”அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் நிகழ்ந்த வன்முறைக்கு எதிராக என் பெயரில் பரவும் அறிக்கை போலியானது. ஆனால் அந்தச் செய்தியில் முற்றிலும் உடன்படுகிறேன். சரியான செய்த தவறான வார்த்தைப் பிரயோகங்களுடன் யாரோ செய்திருக்கிறார்கள்” என்கிறார் இயக்குநர் வெற்றிமாறன்.

நேற்று முதல் முகநூல் மற்றும் வாட்ஸ் அப் வலைதளங்களில் ...நீங்க பஸ்ல போறீங்களா ? அந்த பஸ்சோட டிரைவரோ , கண்டக்டரோ ...யனா இருக்கப் போறான் பார்த்துக்கோங்க!

என்னது உங்கப்பாவுக்கு ஹார்ட் ஆபரேசன் இரத்தம் வேணுமா? வேணான்டா கீழ் சாதிக்காரன் இரத்தம் ஏதாவது ஏத்திட போறான் அந்த டாக்டரு ! அப்படியே அந்த டாக்டரயும் என்ன சாதி னு கேட்டுக்க! துணி எடுக்க கடைக்கு போறியா அந்த சேல்ஸ் வுமன் பொண்ணு என்ன சாதி னு கேளு! அப்படியே அந்த துணிய நெய்தது ....யனா , ...யனா, ...வரான்னு கேட்டுக்க , அப்புறம் அந்த கடை ஓனரு யாருனு கேட்டுக்க கீழ் சாதிக்காரனா இருக்கப் போறாரு!

அப்புறம் உன் ...யிர நீயே வெட்டிக்க , இல்லனா வுட்ரு பெரிய ...யிரா இருந்துட்டு போ! இந்த கவர்மென்ட்டு பள்ளிக்கூடத்துல உங்க பசங்கல அனுப்பாதிங்க அங்க நெறைய .... பசங்க படிச்சி தமிழ வாழ வெக்கிறாங்க! அவங்க கை, கிய் பட்ற போகுது!தீட்டாயிடும்.

அப்புறம் அரிசி, பருப்பு, காய்கறி லொட்டு லொசுக்கு இதெல்லாம் வாங்கும் போது லேப்ல குடுத்து செக் பண்ணி வாங்கிக்கோங்க! ஏன்னா? கீழ் சாதிக்காரன் எல்லாம் விவசாய கூலியா இருக்கிறான் அவன் கை , கால் ஏதாவது பட்டுருக்கும். இப்படிலாம் வாழ முடியும்னா வாழுங்க இல்லனா இருந்து மட்டும் என்ன சாதிக்க போறிங்க அதனால செத்துடுங்க....வெற்றிமாறன். என்று மிகவும் ஆக்ரோசமான வார்த்தைகளில் அந்தப் பதிவு இருந்தது. அப்பதிவுடன் தனக்கு உடன்பாடுதான் என்றாலும் அதைச் சொன்ன விதத்தில் எனக்கு உடன்பாடு இல்லை என்கிறார் வெற்றிமாறன்.