Asianet News TamilAsianet News Tamil

’இந்தியன்’ கதை உண்மையில் யாருக்காக உருவாக்கப்பட்டது என்று தெரிந்தால் ஷாக் ஆயிடுவீங்க...

பட  பூஜையில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன், உலகநாயகன் கமல்ஹாசன், காஜல் அகர்வால்,  இயக்குனர் ஷங்கர், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், எடிட்டர் சுரேஷ் URS, கலை இயக்குனர் முத்துராஜ், பாடல் ஆசிரியர்கள் கபிலன் வைரமுத்து மற்றும் விவேக் ஆகியோருடன் K. கருணாமூர்த்தி மற்றும் AM. ரத்னம் கலந்துகொண்டனர்.

director vasanthabalan reveals some facts about indian
Author
Chennai, First Published Jan 18, 2019, 3:33 PM IST


லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 பட பூஜை மற்றும் படப்பிடிப்பு இன்று துவங்கியது.

பட  பூஜையில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன், உலகநாயகன் கமல்ஹாசன், காஜல் அகர்வால்,  இயக்குனர் ஷங்கர், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், எடிட்டர் சுரேஷ் URS, கலை இயக்குனர் முத்துராஜ், பாடல் ஆசிரியர்கள் கபிலன் வைரமுத்து மற்றும் விவேக் ஆகியோருடன் K. கருணாமூர்த்தி மற்றும் AM. ரத்னம் கலந்துகொண்டனர்.director vasanthabalan reveals some facts about indian

இந்நிலையில் இப்படத்தின் முதல் பாகத்தில் ஷங்கருடன் உதவி இயக்குநராகப் பணியாற்றிய இயக்குநர் வசந்தபாலன் தனது முகநூல் பக்கத்தில் பல சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்...

"நேற்று இணையத்தில் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை துவங்க இருக்கிறது என்ற செய்தியைப் பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி.இந்தியன் தாத்தாவின் கத்திக்கு இரையாக ஊழலும் லஞ்சமும்,வரிந்து கட்டிக்கொண்டு காத்திருக்கிறது. என் குருவிற்கு வாழ்த்துகள். இந்த நேரத்தில் இந்தியன் 1 திரைப்படம் துவங்கிய தருணம்  ப்ளாஷ்பேக். ப்ளாஷ்பேக்குன்னு சொன்னவுடனே ,வேறு தளத்திற்கு தாவிவிடாதீர்கள்.கொஞ்சம் வெயிட்.sweet memories...

ஜென்டில்மேன் திரைப்படத்தின் மும்மொழி வெற்றி சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் ஷங்கர் சாரை அழைத்தார். 1994ம் ஆண்டு என்று நினைக்கிறேன்.காதலன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. எனக்கு ஏதாவது கதையிருக்கா ஷங்கர் என்று ரஜினி சார் கேட்க பெரிய மனுஷன் என்ற தலைப்பில் ரஜினி சாருக்கான கதையை ஷங்கர் சார் உருவாக்கினார். உடனே அவரிடம் சொல்லப்பட்டது.அவர் மிக வியந்து பாராட்டினார்.director vasanthabalan reveals some facts about indian

காதலன் திரைப்படம் முடியும் தருவாயில் ரஜினி சாரின் பல படங்களின் கால்ஷீட் தேதிகள் இடிக்க , உடனே படம் செய்ய முடியாமல் போனது. காதலன் திரைப்படத்திற்குப் பிறகு ஷங்கர் சார் பெரிய மனுஷன் கதையை தான் பண்ண வேண்டும் என்று உறுதியாக இருந்தார்.கதையில் கதாநாயனுக்கு தந்தை மகன் என்ற இரு வேடங்கள். ஆகவே ரஜினி சாருக்கு அடுத்து கமல் சாருக்கு அந்த கதை சொல்லப்பட்டது.பல்வேறு சந்திப்புகள் நிகழ்ந்தன.ஒருவேளை கமல் சார் நடிக்க மறுத்தால் என்ன செய்வது என்று எண்ணி பிளான் பி தயாரானது.

தெலுங்கு கதாநாயகர்கள் நாகார்ஜீனா அல்லது வெங்கடேஷ் அவர்களை மகனாக நடிக்க வைக்கலாம்.டாக்டர் ராஜசேகர் அவர்களை தாத்தா வேடத்தில் நடிக்க வைக்கலாம்.தெலுங்கு படமாக மாறிடுமே என்று கவலைப்பட்டோம்.ஷங்கர் சாருக்கு தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் இருக்கிறது என்ற சமாதான பேச்சும் உலா வந்தது.நமக்கு தெலுங்கு தெரியாது நம்மை கழட்டிவிட்டு விடுவார்கள் என்ற பயம் எனக்கு.director vasanthabalan reveals some facts about indian

கடவுளே எப்படியாவது கமல் சார் ஓகே சொல்லிவிடவேண்டும் என்று டைரக்டர்ஸ் காலனியில் உள்ள விநாயகரை வேண்டிக்கொண்டேன்.நடிகர் கார்த்திக் அவர்களை வைத்து துவங்கலாம் சத்யராஜ் அவர்களை தாத்தா கேரக்டர் என்று பலவிதமான யோசனைகளை நானும் இணை இயக்குநர்களும் வாரி வழங்கினோம்.ஒரு வழியாக கமல் சார் நடிப்பது முடிவானது.விநாயகர் கருணையால் நடந்தது என்று நான் நம்பி வெடலைத் தேங்காய் போட்டேன்.

இந்தியன் என்கிற டைட்டிலுக்கு முன் என்னென்ன டைட்டில்கள் விவாதிக்கப்பட்டன. இன்னொரு பதிவில் பார்க்கலாம்."

Follow Us:
Download App:
  • android
  • ios