நடைபயிற்சியின் போது நேர்ந்த அதிர்ச்சி... விபத்தில் சிக்கிய பிரபல தமிழ் இயக்குநர் மருத்துவமனையில் அனுமதி...!

இன்று காலை வாக்கிங் சென்ற போது அவர் மீது வாகனம் ஒன்று மோதியது. எதிர்பாராத விபத்தால் நிலை குலைந்து, கீழே விழுந்த சுசீந்திரனை அருகில் இருந்தவர்கள் பத்திரமாக மீட்டு  அருகே இருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர். 

Director Suseenthiran Met With an accident

தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு, கென்னடி கிளப், சாம்பியன், ஜீவா போன்ற விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்களையும், பாண்டிய நாடு, நான் மகான் அல்ல உள்ளிட்ட படங்களையும் இயக்கியவர்.  தற்போது தனது அடுத்த படத்திற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார். 

Director Suseenthiran Met With an accident

இன்று காலை வாக்கிங் சென்ற போது அவர் மீது வாகனம் ஒன்று மோதியது. எதிர்பாராத விபத்தால் நிலை குலைந்து, கீழே விழுந்த சுசீந்திரனை அருகில் இருந்தவர்கள் பத்திரமாக மீட்டு  அருகே இருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதை உறுதி செய்தனர். 

Director Suseenthiran Met With an accident

இதையடுத்து அவருக்கு லேசர் முறையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுசீத்திரன், விரைவில் வீடு திரும்புவார் என்றும், சிகிச்சை காரணமாக அடுத்த 3 வாரங்களுக்கு அவர் தொடர் ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios