கதாநாயகனாக மாறிய கால்பந்து வீரர்:

இயக்குநர் சுசீந்திரனின் இயக்கத்தில் கால் பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் திரைப்படத்தில் கதாநாயகனாக ரோஷன் என்பவர் நடிக்கிறார். கால் பந்தை மையமாக வைத்து உருவாகும் திரைப்படம் என்பதால் உண்மையான கால் பந்து வீரரையே கதாநாயகனாக இந்த படத்திற்கு தேர்வு செய்துள்ளார் சுசீந்தரன். 

நிக்னு:

மேலும் இந்த படத்தில் கதாநாயகனின் இளம் பருவத்தில் நடிக்க குழந்தை நட்சத்திரம் நிக்னு தேர்ந்தெடுக்க பட்டிருக்கிறார் . இவர் இயக்குநர் சுசீந்திரன் இயக்கிய ” ஆதலால் காதல் செய்வீர் ” படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ”

சுசீந்தரன் - யுவன்சங்கர் ராஜா:

ஆதலால் காதல் செய்வீர் ” படத்துக்கு பிறகு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவோடு சுசீந்திரன் இணையும் படம் இது . இப்படத்தில் நடிக்க நிஜ கால்பந்தாட்ட வீரர்களை இயக்குநர் சுசீந்திரன் தமிழகம் முழுவதும் தேடி வருகிறார் வருகிறாராம்.

இதன் மூலம் அடையாளம் காணப்படாமல், திறமையோடு இருக்கும் பல கால்பந்து வீரர்கள் வெளியுலகிற்கு வருவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது. மேலும் இவரின் இந்த புதிய முயற்சிக்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.