director suseendharan wishes the lover

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான காதலர்கள் இன்று காதலர்தினத்தை கொண்டாடி வருகின்றனர். காதலர் தினத்தை முன்னிட்டு, கிரீடிங் கார்ட், ரோஜா பூ, மற்றும் காதலர்களுக்கான விதவிதமான பரிசு பொருட்களின் வியாபாரமும் சூடு பிடித்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

பிப்ரவரி 14

காதலர்களின் முக்கிய நாளான இன்று பல பிரபலங்கள் அனைத்து காதலர்களுக்கும் தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்து வருகின்றனர்.

இயக்குனர் சுசீந்தரன்:

இந்நிலையில் இயக்குனர் சுசீந்தரனும் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதுவும் எச்சரிக்கையோடு... இவர் இயக்கிய 'ஆதலால் காதல் செய்வீர்' படத்தின் கிளைமாக்ஸில் காதலர்களால் பாதிக்கப்படுவது அவர்களுடைய குழந்தை தான் என்பதை மிகவும் உணர்சிவசத்தோடு கூறியிருப்பார்.

எச்சரிக்கை:

காதலர்கள் கண்ணியமாக நடந்துக்கொள்ளவில்லை என்றால் இப்படி தான் நடக்கும் என்பதை எச்சரிக்கையோடு கூறி சுசீந்திரன் காதலர் தின வாழ்த்தில் சூசகமாக கூறியுள்ளார். 

Scroll to load tweet…