Asianet News TamilAsianet News Tamil

’விஷாலின் கையாள் ஆர்.கே.செல்வமணி அவர்களே’...இயக்குநர் சங்க விவகாரங்களை துகிலுரிக்கும் கடிதம்...

இயக்குநர் சங்கத்தில் நடந்த அத்தனை குழப்பங்களுக்கும் காரணமானவர் குறிப்பாக பாரதிராஜாவை ராஜினாமா செய்ய வைத்ததே இவர்தான் என்று மொட்டைக்கடிதாசுகளால் குற்றம் சாட்டப்பட்ட பிரபல தயாரிப்பாளரும், ‘மிக மிக அவசரம்’படத்தின் இயக்குநருமான சுரேஷ் காமாட்சி இயக்குநர் ஆர்.கே .செல்வமணிக்கு அனல்பறக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

director suresh kamatchi's open letter to r.k.selvamani
Author
Chennai, First Published Jul 10, 2019, 5:13 PM IST

இயக்குநர் சங்கத்தில் நடந்த அத்தனை குழப்பங்களுக்கும் காரணமானவர் குறிப்பாக பாரதிராஜாவை ராஜினாமா செய்ய வைத்ததே இவர்தான் என்று மொட்டைக்கடிதாசுகளால் குற்றம் சாட்டப்பட்ட பிரபல தயாரிப்பாளரும், ‘மிக மிக அவசரம்’படத்தின் இயக்குநருமான சுரேஷ் காமாட்சி இயக்குநர் ஆர்.கே .செல்வமணிக்கு அனல்பறக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.director suresh kamatchi's open letter to r.k.selvamani

அக்கடித விபரம் வருமாறு,...தமிழ் சினிமாவின் அனைத்து சங்கங்களிலும் எந்த ரூபத்திலாவது,  ஏதாவதொரு பதவியில் துண்டுபோட்டு அமர்ந்திருக்கும் திரு.  ஆர். கே. செல்வமணி அவர்களே! 

நான் காஞ்சி காமாட்சி... சாரி சுரேஷ் காமாட்சி! தயாரிப்பாளர். தயாரிப்பாளர்களின் நலனுக்காக பல மேடைகளில்... பல இடங்களில் கதறினாலும் இன்னும் எந்தப் பதவியும் இதுவரை  வகிக்கவில்லை. 

எனக்கு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களின் நலனைத் தவிர வேறெந்த டி50ஆசையெல்லாம் கிடையாது. 

இருநாட்களுக்கு முன்பு நீங்கள் சொல்லி எழுதப்பட்ட மொட்டைக் கடிதாசி ஒன்று உங்கள் அடிவருடிகளால் சுற்றவிடப்பட்டது. 

இது எதற்கு மறைமுக என்னை இழுக்க அவசியம் என்று எனக்குத் தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் நேரடியாக கேட்கலாமே? பேசலாமே? அதனால்தான் நான் நேரடியாகவே உங்களிடம் வருகிறேன். 

நான் உங்களிடம் கேட்கப்போவது சில கேள்விகள்தான். 

இயக்குநர் இமயம் பதவி விலகலுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? அதுவும் நான் சொல்லி அவர் விலக வேண்டிய அவசியம் அவருக்கென்ன? 

அவரை அவசரம் அவசரமாக பதவி ஏற்கச் செய்ததில் உங்களுக்கு வேண்டுமானால் உள்நோக்கம் இருக்கலாம். 

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பதவிக்கு உங்கள் பழைய நண்பர் போட்டியிட்டால் கூட்டாகச் சேர்ந்து இன்னும் பல காரியங்களை சாதித்துக் கொள்ளலாம் என்பது உள் நோக்கமாக இருக்கலாம். 

அல்லது டி50 நடத்தவோ அதன் பலன்களை அனுபவிக்கவோ தடையாக  வேறு யாரும் வந்துவிடக்கூடாது என்ற உள்நோக்கம் காரணமாக  இருக்கலாம். 

இயக்குநர் இமயம் மென்மையானவர் என்பதால் அவரை எளிதாக கன்வின்ஸ் பண்ணி தன் காரியம் சாதித்துக்கொள்ளும் உள்நோக்கம் இருக்கலாம்..

எனக்கு என்ன உள்நோக்கம் இருக்க முடியும் சொல்லுங்கள்??

இவ்வளவு நாள் இயக்குநர் சங்கத்தில் பதவியில் இருந்து என்ன செய்தீர்கள். 

செம்மையாக செயல்பட்ட இயக்குநர் விக்ரமன் அவர்களுக்கு இந்த நேரத்தில் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

அதேவேளையில் நீங்கள் இயக்குநர்களுக்காக செய்த அல்லது உதவி இயக்குநர்களுக்காக செய்த ஏதாவது ஒரு நல்ல நிகழ்வை எடுத்துக்காட்ட முடியுமா? இன்று வரை உதவி இயக்குநர்களுக்கான ஊதியத்தை முறைப்படுத்தியுள்ளீர்களா?? அவர்களுக்கான  வேலைவாய்ப்புக்கான உத்திரவாதத்தை ஏற்படுத்தித் தரமுடிந்ததா இதுவரைக்கும்?director suresh kamatchi's open letter to r.k.selvamani

தமிழகத்தின் அடையாளமாகப் பார்த்துக்கொண்டிருக்கும் இயக்குநர் இமயத்தை மிரட்டினது மாதிரியும்.. அவருக்கு சுயமா முடிவெடுக்கத் தெரியாத மாதிரியும் எப்படி சொல்ல முடிகிறது உங்களால் திரு. செல்வமணி அவர்களே? 

போற்றுதலுக்குரிய எம் இமயம் பாரதிராஜா என்ன கைக்குழந்தையா? நான் சொல்லிக் கேட்க? அவர் அரசு நியமித்த தயாரிப்பாளர் சங்கத்தின் கமிட்டியில் இருக்கிறார். அப்படி நியமிக்கப்பட்ட ஒட்டு மொத்த சினிமாவின் அடையாளமான அவரை இயக்குநர்கள் சங்கத்தில் கொண்டு வரவேண்டிய காரணம் என்ன?? 

 வெளிநாட்டிற்கும்... ஹைதராபாத் போய்வரவும் தயாரிப்பாளர் சங்கம் உங்களுக்கு விமானச் சீட்டு வாங்கித் தர வேண்டிய கட்டாயம் என்ன? 

விசாலுக்கும் உங்களுக்கும் என்ன டீலிங்?? விசால் ஏன் டிக்கெட் கொடுத்தார்?? 

பெப்ஸிக்கு எதிராக படைப்பாளிகள்னு ஆரம்பிச்சதே நீங்கதான். அப்புறம் பெப்ஸியில் பதவிக்குப் போட்டி போட்டு வெற்றி பெற்றபின் விட்டுப்போன யூனியனையெல்லாம் சேர்த்துக்கிட்டு இப்போ தயாரிப்பாளர்களுக்கு நெருக்கடி கொடுக்குறீங்க... 

சாதனை செய்த மதிக்கப்படத்தக்க இயக்குநர் ருத்ரய்யா அவர்களை இயக்குநர் சங்கத்தில் உறுப்பினர் இல்லை. அவர்களின் நல்லது கெட்டதில் சங்கம் கலந்துகொள்ளாதுன்னு சொல்ற நீங்களா இயக்குநர் இமயத்தின் கௌரவத்தைப் பற்றி பேசுகிறீர்கள்.?

இத்தனை ஆண்டுகாலப் பதவியை வைத்து ஏன் இமயத்தைப் பெருமைப்படுத்தும் ஒரு விழாவைக்கூட முன்னெடுக்கவில்லை. இறந்து போன மரியாதைக்குரிய பாலச் சந்தர் பாலுமகேந்திரா மகேந்திரன் ஆகியோரை வரும் காலம் நினைவில் கொள்ள... பெருமைப்படும் என்ன காரியத்தை செய்துள்ளீர்கள் இதுவரை.. ? 

இப்படி எதுவுமே செய்யாத உங்களுக்கு இப்போது மட்டும் இயக்குநர் இமயத்தை பதவிக்கு அவசர அவசரமாக பின் வாசல் வழியாக அழைத்து வரும் நோக்கம் என்ன? 

ஆரம்பத்தில் உங்கள் கபட நாடகம் தெரியாத அப்பா அன்பால் நெகிழ்ந்து மறுக்காமல் உறுப்பினர்களை மதித்து ஏற்றார் பதவியை. 

பின்புதான் தெரிந்தது இது நீங்கள் விரிக்கும் வலை என... ஏற்கென தமிழ்த்திரை தொலைக்காட்சி அனுபவம் நினைவுக்கு வந்திருக்குமோ என்னவோ ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து விலகினார். 

அன்பு உதவி இயக்குநர்களே இவர் விசாலின் கையாள் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். தேர்தலை நேர்மையாக அவர் எதிர்கொள்ளட்டும். சுயநலத்தினால் எல்லாப் பதவிகளையும் வகித்துக் கொண்டு திரையுலகத்தை குழப்பத்திலேயே வைத்திருக்க முனைகிறார். 

நகரியில் வீடுகட்டிக் கொண்டு பெப்சி வாகனத்தில் டீசலை நிரப்பிக் கொண்டு தினமும் ஓசியில் சென்று வருகிறார். 

ஏன் இங்கேயே இருந்து நிர்வாகத்தைக் கவனித்துக்கொள்ளும் திறமையுள்ளவர்கள் யாருமில்லையா? 

எத்தனை திறமையாளர்கள் உள்ளனர்..? அவர்களையெல்லாம் அரசியல் செய்து அரசியல் செய்தே ஒதுக்கி வைத்து தானே எல்லா நலன்களையும் எடுத்துக்கொள்கிறார்... 

மனைவி ஆந்திராவில் கட்சிப் பதவிகளில். ஆனால் இவரோ தமிழ்நாட்டில் எல்லா சங்கங்களிலும் பதவியில் இருப்பாராம்...!!

நீங்கள் கண்மூடித்தனமாக விசாலை ஆதரித்ததின் விளைவு க்யூப் ரேட் ஏறிப்போனதற்கான காரணம் என்பதன் அடிப்படையாவது உங்களுக்குப் புரிகிறதா?

சங்கத் தேர்தல்களைக்கூட நேர்மையாக நடத்த முடியாத நீங்களும் உங்கள் நண்பர் விசாலும் இந்த சினிமாவில் இல்லையென்றால் தமிழ் சினிமா ரொம்ப ஒற்றுமையாக ஆரோக்கியமாக இருக்கும். 

நீங்க நல்ல இயக்குநர். இந்த சங்கங்களுக்கு நல்லது செய்ய நல்ல படங்களை இயக்கப் போவீர்களா? 

ரொம்ப ஆவலுடன் 

சுரேஷ் காமாட்சி
தயாரிப்பாளர்.

Follow Us:
Download App:
  • android
  • ios