*  தொழில்முறை குத்துச்சண்டை வீராங்கனையாக இருந்த ரித்திகா சிங், யதேச்சையாக ‘இறுதிச்சுற்று’ படத்தின் மூலம் சினிமாவிலும் ஹிட்டடித்தார். அதன் பின் ஆண்டவன் கட்டளை உள்ளிட்ட சில படங்கள் அவரை லக்கி நடிகையாக அடையாளப்படுத்தின.  அதன் பின் அவரே ஆசைப்பட்டாலும் நல்ல படங்கள் அமைவதில்லை. இந்நிலையில், இஸ்டாவில் தன்னிடம் ‘நான் உங்களை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்’ என்று சொல்லிய ரசிகரிடம் ‘நான் அஞ்சு பேரை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன். இதுக்கு என் குடும்பம் சம்மதிக்கலேன்னா, நான் கல்யாணமே பண்ணமாட்டேன்.’ என்று வெகு சீரியஸாக பதில் சொல்லி, அதிர வைத்துள்ளார். 
(குத்துங்க ரித்திகா குத்துங்க! இந்த ஆம்பளைங்களே இப்படித்தான்....)

*  ரஜினிக்கு ஜோடியாக நடித்ததை விட அவருக்கு வில்லியாக நடித்துவிட்டால் அதன் பின் செம்ம அப்ளாஸ் வாங்கி, கோலிவுட்டில் ஜெயித்துவிடுவார்கள் நடிகைகள். மன்னன் பட விஜயசாந்தி, படையப்பாவின் ரம்யாகிருஷ்ணன் ஆகியோர் வரிசையில் இப்போது குஷ்புவும் இணைந்திருக்கிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தில் ரஜினிக்கு எதிராக பெண் அரசியல்வாதியாக வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறாராம் குஷ்பு. 
(கடவுளே! கடவுளே!)

*  ஹெச்.விநோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் ஷெட்யூல் சத்தமில்லாமல் முடிந்திருக்கிறது. ஐதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் பிளாக்ஸை பின்னி எடுத்திருக்கிறார் தல. வழக்கம்போல் டூப் இல்லாமல் ரிஸ்க் மூவ்களை கூட ரஸ்க் சாப்பிடுவது போல் நடித்து முடித்துவிட்டார். 
இனி அடுத்த ஷெட்யூல் முழுக்க டூயட், சென்டிமெண்ட்ஸ் என்று போக இருக்கிறதாம். 
(அப்ப, டூயட்டுலேயும் ‘வலிமை’ காட்டுவீங்களா தல!)

*  சமகால ‘இயக்குநர்களின் ஹீரோ’ என்று பெயர் பெற்ற நடிகர்களில் மிக முக்கியமானவர் ஜெயம் ரவி. டைரக்டர் என்ன சொல்கிறாரோ அதை மறு பேச்சில்லாமல் செய்து முடித்து, படத்தின் சக்ஸஸிற்கு தனது முதுகை முரட்டுத்தனமாக முட்டுக் கொடுப்பார். 
ரவியின் நீண்ட நாள் ஆசை, இயக்குநர் மிஷ்கினின் படத்தில் நடிக்க வேண்டும் என்பது. சில நாட்களுக்கு முன் ஒரு பார்ட்டியில் மிஷ்கினிடம் இதை நேரடியாகவே அவர் சொல்ல, மிஷ்கினோ அலட்சியமாக பார்த்துவிட்டு நகர்ந்துவிட்டாராம். ஆனாலும் ஈகோ பார்க்காமல், மிஷ்கினின் நெருங்கிய ஹீரோவும் தனது நண்பனுமான விஷாலிடம் தன் ஆசையை சொல்லியிருக்கிறார். அநேகமாக அந்த படத்தை விஷாலின் நிறுவனமே தயாரிக்கலாம் என தகவல். 

*  கமல்ஹாசனின் ஹாட்டஸ்ட் மூவியான ‘இந்தியன்’ படத்தின் சீக்வெல் பல தடைகளை தாண்டி தயாராகிக் கொண்டிருக்கிறது. இப்படத்தில் கமலோடு சித்தார்த், காஜல் அகர்வால், ப்ரியா பவானிசங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கமலின் மகனாக அல்லது பேரனாக சித்தார்த் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இருவருக்கும் கெமிஸ்ட்ரி செட் ஆகுமா? என்று துவக்கத்தில் யோசிக்கப்பட்டது. ஆனால் அரசியல் கருத்துக்கள், ஆளும் மத்திய, மாநில அரசுகளை விமர்சிப்பது ஆகியவற்றில் இருவரும் நேர்கோட்டில் இருப்பதால் தானாகவே உருவாகிவிட்டதாம் செம்ம கெமிஸ்ட்ரி. இதை பார்த்து  ஷங்கர் உள்ளிட்ட யூனிட்டே வாய் பிளந்து நிற்கிறதாம். (கெமிஸ்ட்ரி உருவாக்கலேன்னா அவர் பேரு கமலா என்ன?)