மிக்சி என்கிற வீட்டு சாதனம் வந்த பின், காலம் காலமாக நம் முன்னோர்கள், வைத்திருந்த அம்மி, உரல், போன்றவை இருக்கும் இடம் தெரியாமல் போய் விட்டது. சிலர் அதையும் ஒரு அழகு சாதனா பொருள் போல் வீட்டின் ஓரத்தில் வைத்துள்ளனர். 

நடுத்தர குடும்பத்தினர் வீட்டில், பவர் கட் என்றால் மீண்டும் அம்மியை சிலர் தூசு தட்டினாலும், சிலர்... ரெடிமேடாக கிடைக்கும் ரசப்பொடி, சாம்பார் பொடி போன்றவற்றை பயன்படுத்துகிறார்கள்.

இந்நிலையில் எப்போதும் கிராமத்து மனம் மாறாத படங்களை இயக்கும் இயக்குனர் சீனு ராமசாமி, உண்மையிலேயே.. கிராமத்து மனம் பறக்க, ரசம் வைத்து மணக்க வைத்துள்ளார்.

இந்த கொரோனா விடுமுறையை வீட்டில் கழித்து வரும், அவர்... அம்மியில், மிளகு, சீரகம், பூண்டு போன்ற பொருட்களை வைத்து அரைத்து வைத்த ரசத்தின் வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியாகி, வைரலாகி வருவதோடு லைக்குகளையும் அள்ளி வருகிறது.

சமீபத்தில் பல நடிகைகள் ‘டால்கோனா காபி’, புதிய விதமான சமையல் என அசத்தி வந்தாலும், இந்த ரசத்துக்கு ஈடு கொடுக்க முடியுமா? வைரலாகி வரும் சீனு ராமசாமியின் ரசம் வீடியோ இதோ...