முரட்டு இரட்டை அர்த்தப்படங்களிலிருந்து சாதாரணப் படங்களுக்குத் திரும்பிவிட்டார் என்று நம்பப்பட்ட இயக்குநர் தனது படத்துக்கு அர்விந்த்சாமிக்கு ஜோடியாக நடிக்க 17 வயது கல்லூரி மாணவிதான் வேண்டும் என்று அடம்பிடிக்கிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

சந்தோஷ்.பி.ஜெயக்குமார் ‘ஹர ஹர மகாதேவகி’,’இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ என்று இரு காவியப்படங்களை எடுத்தவர். அடுத்ததாக இவர் இயக்கவிருக்கும் பட அறிவிப்பில் கதாநாயகனாக அர்விந்த் சாமி பெயர் அறிவிக்கப்படவே செக்ஸ் படங்களிலிருந்து தனது ரூட்டை மாற்றிக்கொண்டு நல்ல படம் எடுக்கப்போகிறார் என்று நாடே நம்பிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தனது படத்துக்கு அர்விந்த்சாமிக்கு ஜோடி தேடும் ஒரு அறிவிப்பில் 16 முதல் 18 வயதுக்குள் உள்ள ஒரு பள்ளி மாணவி படத்தின் கதாநாயகி பாத்திரத்துக்குத் தேவை என்றும் மேக் அப் இல்லாத ஒரிஜினல் படத்தை மெயிலில் அனுப்பவும் என்றும் படத்தின் ஆடிஷனுக்காக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

1970ல் பிறந்த அர்விந்த்சாமிக்கு தற்போது 49 வயதாகிறது. 92ல் ‘ரோஜா’ படத்தில் அறிமுகமானபோது அவருக்கு வயது 22. ஒருவேளை அந்த அர்விந்தசாமிக்கு ஜோடி தேடுகிறாரோ ‘இருட்டு அறை’ இயக்குநர்?.