தமிழில் களவாணி படத்தில் மூலம் அறிமுகமானவர் நடிகை ஓவியா. இதைத்தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும் இவரால் கோலிவுட் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் கடந்த ஆண்டு,  இவர் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விளையாடினார். இவரின் நேர்மையான எண்ணம், மனதில் பட்டத்தை நேரடியாக பேசும் சுபாவம், ஆகியவை  ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் கவர்ந்தது.

இந்த நிகழ்ச்சிக்குப்பின் இவர் நடிப்பில், பெண் இயக்குனர் அனிதா சுதீப் இயக்கத்தில் ' 90 எம் எல் ' படத்தில் நடித்துள்ளார்.  பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஓவியா பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் நடித்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. படுக்கையறை காட்சி மது, சிகரெட், என்று டிரைலர் பார்பவர்களையே உலுக்கியது. குறிப்பாக பெண்கள் இரட்டை அர்த்தங்கள் பேசி அதிர வைத்துள்ளனர்.

ஓவியா மது அருந்துகிறார்,  ஆபாசமாக பேசுகிறார், எனவே இந்த படத்தை வலைதளத்தில் பலரும் கண்டித்து வருகின்றனர்.  படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று பெண்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கருத்து பதிவிட்டுள்ளனர்.

இதனால், நடிகை ஓவியா இது குறித்து ட்விட்டரில் கருத்து சமூகவலைத்தளத்தில் கூறுகையில்,  " விதையை வைத்து பழத்தின் ருசியை தீர்மானிக்காதீர்கள்" என தெரிவித்தார். மேலும் படத்தை தணிக்கை குழுவினர் பார்த்து ஆபாச இரட்டை அர்த்த வசனங்கள் இருப்பதால் 'ஏ' சான்றிதழ் அளித்துள்ளனர். 

இந்த படம் குறித்து இயக்குனர் கூறும்போது...  "பெண்கள் ஒரு கட்டமைப்புக்குள் வாழாமல் அதை உடைத்து சொந்தமாக முடிவு எடுப்பதை படம் பேசும் அழகு நிலையத்தில் வேலை பார்க்கும் ஓவியாவும் அவரது தோழிகளும் தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்வதே கதை" என்று தெரிவித்துள்ளார்.