முதல் சந்திப்பில் ‘ஆடை’படத்தின் கதையச் சொல்லிவிட்டுத் திரும்பிய பிறகு அது நான் உருவாக்கிய கதைதானா அல்லது யாரிடமிருந்தும் சுட்ட கதையா என்ற சந்தேகம் அமலாபாலுக்கு இருந்தது’ என்கிறார் இயக்குநர் ரத்னகுமார்.

’மேயாத மான்’இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும்’ ஆடை’ படத்தில், அமலா பால் மிக தைரியம் வாய்ந்த பெண்ணாக நடித்துள்ளார். இப்படத்தில் விவேக் பிரசன்னா, ரம்யா, ஸ்ரீரஞ்சனி ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தின் டீஸரில் அமலா பால் நிர்வாணமாக நடித்திருக்கும் காட்சி வெளியாகி பெரும் பரபரப்புக்கு ஆளானது. அடுத்ததாக விஜே ரம்யாவுடம் நடித்த லிப்லாக் காட்சியும் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

படம் வரும் 19ம் தேதி வெளிவரவிருக்கிறது. இப்படம் பற்றி பேசிய இயக்குநர் ரத்னகுமார்,’’ இப்படம் கண்டிப்பாக பெண் முன்னேற்றத்தையோ, பெண் உரிமையோ பேசும் படமாக இருக்காது. இது ஒரு திரில்லர் படம். அந்த அனுபவத்தை இந்தப்படம் தரும் என்றார். மேயாத மான் படத்தில் நிறைய பிரச்சனைகள் இருந்தது. சிலர் அந்தப்படத்தை பல முறை பார்த்ததாக சொன்னார்கள். சிலர் 10 நிமிடம் கூட பார்க்க முடியவில்லை என்றார்கள். இந்தப் படத்திற்கு அது நேராது என நினைக்கிறேன். இந்தப் படத்தில் அமலா பால் நிர்வாணமாக நடித்ததை பற்றி மட்டுமே தான் அனைவரும் கேட்கிறார்கள். நிர்வாணமாக நடிப்பது மட்டும் தான் துணிச்சலா எங்கிறார்கள். அப்படியில்லை அமலாபால் இரு குழந்தைகளுக்கு தாயாக நடித்திருக்கிறார். 10 வயது சிறுமிக்கு அம்மா வேடமேற்றிருக்கிறார். அவர் கதைக்கு தேவையென்றால் என்ன வேண்டுமானாலும் செய்வார். 

அமலா பால் போன்ற நடிகை கிடைத்தது எங்களுக்கு வரம். நான் முதன் முதலில் அமலா பாலிடம் கதை சொன்னபோது கதை பிடித்திருக்கிறது சொல்கிறேன் என சொல்லி அனுப்பி விட்டார்.பின்பு என்னை சந்தித்தபோது ஆள் ஒரு மாதிரியாக இருக்கிறாரே... கதை இவரோடது தானா? என சந்தேகப்பட்டு என் மேனேஜரை விசாரிக்க சொன்னேன் என சொல்லிச் சிரித்தார். ஆனால் ஷீட்டிங் வந்த பின் எங்களை முழுமையாக நம்பினார் என்றார். அவரைத் தவிர யாரும் இந்த படத்தை செய்ய முடியாத அளவு நடிப்பை தந்துள்ளார்’என்று அமலா பாலுக்கு ஓவராக ஐஸ் வைக்கிறார் ரத்னகுமார். பாத்து பாஸ். இங்க பல ஜர்னலிஸ்டுங்க கிசுகிசு எழுத நியூஸ் கிடைக்காம தவிக்கிறாங்க...