இந்த வருடம் வெளிவந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் உலக அளவில் மிகப்பெரிய வசூலை தந்த படமாக இருந்தது.

இந்த படத்தை தொடர்ந்து தற்போது பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் '2.0' படத்தின் டப்பிங் பணியில் உள்ளார் ரஜினிகாந்த்.

மேலும் 2.0 படத்திற்கு பிறகு 'கபாலி' படத்தின் இயக்குனர் ரஞ்சித் இயக்கதில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை அவரது மருமகனும், நடிகருமான தனுஷ் தயாரிக்கவுள்ளார்.

இந்நிலையில் ரஜினி-ரஞ்சித் இணையும் புதிய படம் குறித்து ஆலோசனை செய்ய இன்று ரஜினியை ரஞ்சித் சந்திக்க உள்ளதாகவும், ரஞ்சித் உடன் காஸ்ட்யூம் டிசைனர் குழுவும் செல்லவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

'2.0' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளதால் விரைவில் அவர் ரஞ்சித் இயக்கவுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் இதுகுறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.