உலக மக்களையும், இந்தியாவையும் ஒட்டுமொத்தமாக அச்சுறுத்தி வரும் கொரோனாவை ஒற்றுமையுடன் எதிர்த்து போராட வேண்டும் என்பதற்காக, பாரத பிரதமர் மோடி, ஏப்ரல் 5 ஆம் தேதி, ஞாயிற்று கிழமையான (நேற்று), அணைத்து இந்தியமக்களும் தங்களுடைய ஒற்றுமையை வெளிக்காட்டும் விதமாக, இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் அவரவர் வீட்டில் அணைத்து மின் விளக்குகளையும் அணைத்து விட்டு, வாசல்களில், அகல் விளக்கு, மெழுகு வத்தி, அல்லது டார்ச் அடித்து தங்களுடைய ஒற்றுமையை காட்ட வேண்டும் என கூறினார்.

பாரத பிரதமர் மோடியின், இந்த வார்த்தைக்கு வலு சேர்க்கும் விதமாக, இந்தியாவின் மூலை முடுக்கில் உள்ள அனைவரும் பாரபட்சம் இன்றி விளக்கேற்றி, தங்களுடைய ஆதரவை கொடுத்தனர்.

மேலும் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அணைத்து தென்னிந்திய திரையுலகை சேர்ந்தவர்களும் அவரவர் வீட்டில், விளக்கேற்றி அதன் புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டனர். 

சர்ச்சை இயக்குனர்:

இந்நிலையில் சர்ச்சை இயக்குனராக அனைவராலும் அறியப்படும், ராம் கோபால் வர்மா, அனைவரும் எதிரிபார்த்தது போல் ஏடா கூட வேலையே செய்து, அதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார்.

சிகரெட் பிடிக்கும் வீடியோ:

பிரதமர் மோடி, ஒற்றுமையை வெளிக்காட்ட விளக்கேற்ற சொன்ன, நேற்று இரவு 9 மணிக்கு, சிகிரெட் பத்த வைக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பல்வேறு விமர்சனங்களை பெற்று வருகிறது.

அந்த வீடியோ இதோ: