பல 100 ஆண்டுகளாக தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக , நடத்தப்படும் ஜல்லிக்கட்டுக்கு பீட்டா அமைப்பு மாடுகளை கொடுமை படுத்துவதாக கூறி தடை விதித்தது.

இதற்கு தமிழ் நாட்டில் உள்ள பல இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், திரையுலகினர் மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என மத்திய அரசுக்கு எதிராகவும், பீட்டா அமைப்புக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இது குறித்து ' சிவா மனசுல சக்தி' 'பாஸ் என்கிற பாஸ்கரன்' போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் ராஜேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், பீட்டா அமைப்பு உயிர் உள்ள எந்த ஜீவனுக்கு துன்பம் வந்தாலும் போராடுவோம் என கூறுகின்றனர், ஏன் சிக்கன் 65, மட்டன் பாயா, பீப் கறிக்காக அடித்து கொள்ள படும் மாடுகள், ஆடுகள், கோழிகள்  போன்றவற்றிற்கு ஆதரவு தெரிவிக்க வில்லை .

ஒரு நாள் விளையாட்டுக்காக பாரம்பரியமாக நடத்தப்படும் ஜல்லிக்கட்டு தான் அவர்கள் கண்களுக்கு தெரிகிறதா என கேள்வி எழுப்பியுள்ளார்.

ராஜேஷின் இந்த கருத்துக்கு பல ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களும் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.