தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ள விஜய்யின் ‘பிகில்’பட வெறித்தனம் பாடலுக்கு பிரபல இயக்குநர் பிரபு சாலமனின் மகள் ஷைனி டிக்டாக் பண்ணியிருப்பது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய்யின் ‘பிகில்’படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் அவ்வளவாக ஹிட் ஆகாவிட்டாலும் விஜய்யே பாடியுள்ள ‘வெறித்தனம்’பாடல் மட்டும் செம ஹிட்டாகியுள்ளது. அதிலும் குறிப்பாக இப்பாடலை இளைஞர், இளைஞிகள் பலரும் டிக்டாக் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ’கண்ணோடு காண்பதெல்லாம்’ துவங்கி ‘மைனா’ ,’கும்கி’ உட்பட பத்துக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ள பிரபல இயக்குநர் பிரபு சாலமனிம் மகள் ஷைனி டிக் டாக் செய்துள்ள ‘வெறித்தனம்’பாடல் வலைதளங்களில் வைரலாகிவருகிறது. கடந்த பல மாதங்களாகவே டிக்டாக்கில் கலக்கி வரும் ஷைனி பிரபு சாலமனின் மகள் என்பது அவர் ‘கனா’படப்பாடல் ஒன்றை டிக்டாக் செய்தது வரை யாருக்கும் தெரியாது. அதன்பின்னர் அவர் முகபாவத்தையும் நகைச்சுவை உணர்வையும் ரசிக்கும் சினிமா பிரபலங்கள் அவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க முயன்று வருவதாகவும் ஷைனி தன் தந்தையின் அனுமதிக்காகக் காத்திருப்பதாகவும் தகவல்.