விஜய் - அஜித் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து, சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ள இயக்குனர் பேரரசு ஊரடங்கால் வெளியில் தலை காட்ட முடியாத நிலையில், தன்னுடைய மகள், தனக்கு முடி வெட்டிவிடும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவருடைய மகளின் இந்த செயலுக்கு நெட்டிசன்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

கொரோனா பீதியின் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடுமையாக பின்பற்றப்பட்டு வரும் நிலையில், அத்தியாவசிய பொருட்களின் கடைகளை தவிர அணைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது.

குறிப்பாக, முடி வெட்டும் சலூன்கள் மூலமாக கூட கொரோனா பரவ வாய்ப்பு உள்ளதாக கூறப்படுவதால், வெளியில் சென்று முடி திருத்துவதற்கு கூட பலர் அச்சப்படும் நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில், இயக்குனர் பேரரசு தன்னுடைய முடியை எப்படி வெட்டிக்கொள்வது என கவலையுற்று இருந்த நிலையில், அவரின் செல்ல மகள்... " அப்பா நான் வெட்டிவிடுறேன் " என்று என் மகள் துணிந்து கத்திரியோடு வந்திருக்கிறார். இயக்குனரும் வேறு வழியின்றி தனது தலையைக் கொடுக்க, அவர் எதிர்பார்த்ததை விட சிறப்பாகவே முடி வெட்டி விட்டு அசத்தியுள்ளார். 

இதனை ரசிகர்களுக்கு தெரிவிக்கும் விதமாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், இயக்குனர் பேரரசு முடி திருத்துவதற்கு முன்பும் முடி வெட்டிபின்பும் எடுத்த புகைப்படங்களை வெளியிட, பேரரசின் மகள் செய்த காரியத்துக்கு பலரும் மனதார பாராட்டுகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். 

இயக்குனர் பேரரசு கடைசியாக, தமிழில் கடந்த 2015 ஆம் ஆண்டு 9 பதுல குரு என்கிற படத்தை இயக்கினார். இதை தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து படம் பண்ண உள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், கால் சீட் பிரச்சனை காரணமாக அந்த படம் தாமதமாகிக்கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.