director pandiraj scolding priya bavani shaker

'கடைக்குட்டி சிங்கம்' திரைப்படம் தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கிலும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. அதற்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் சக்சஸ் மீட் நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில், அனைத்து கலைஞர்களும் தங்களுடைய குடும்பத்தினரோடு கலந்து கொண்டனர். அப்போது நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் பாண்டிராஜ். 

மாடுகளை வைத்து எடுக்கப்பட்ட சிறந்த காட்சிகளை பீட்டா அமைப்பு நீக்கியதற்கு தன்னுடைய கண்டனத்தை தெரிவித்தார். மேலும் இந்த படத்தில் நடித்த இரண்டு நாயகிகளை பொது மேடையில் திட்டினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நடிகை பிரியா பவானி சங்கர் சரியான நேரத்தில் படப்பிடிப்பிற்கு வந்ததே இல்லை, அதே போல் நடிகை பிரியா மற்றும் படத்தின் மற்றொரு நாயகியான சாயிஷா இருவரும் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வில்லை என்று கூறினார். 

ஆனால் அடுத்த படத்தில் நடிக்கும்போது என் படத்தில் நடந்து கொண்டது போல் நடந்து கொள்ளாதீர்கள் என கூறினார்.

பிரியா பவானி தற்போது இவர் இரண்டாவது படத்தின் இயக்குனரிடம் பொது இடத்தில் திட்டு வாங்கியது அவரை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியதாக கூறி இவர் கஷ்டப்பட்டதாக நெருங்கிய வட்டாரத்தில் கூறப்படுகிறது.