சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கியத்தன் மூலம், உலக மக்கள் அனைவராலும் சிறந்த இயக்குனராக அறியப்பட்டவர் இயக்குனர் பா. ரஞ்சித். இவரின் தந்தை இன்று முற்பகல் 2 மணிக்கு காலமானார். இதனால் அவருடைய குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தமிழ் சினிமாவில், மிக குறுகிய காலத்திலேயே, முன்னணி இயக்குனராக தன்னை நிலைநிறுத்தி கொண்டவர், இயக்குனர் பா.ரஞ்சித். இவரின் அறிமுக படமான அட்டகத்தி. ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்றதை தொடர்ந்து, நடிகர் கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தை இயக்கினார். சிறிய பட்ஜெட்டில் இயக்கிய இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

பின் நடிகர் ரஜினிகாந்தை வைத்து அடுத்தடுத்து, 'கபாலி' , 'காலா' என இரண்டு படங்களை இயக்கி உலக அளவில் பிரபலமானார். 

தற்போது இயக்குனர் என்பதை தாண்டி, நீலம் என்கிற தயாரிப்பு நிறுவனத்தையும் நிர்வகித்து வருகிறார். இந்நிலையில் இவருடைய தந்தை பாண்டுரங்கன் (63 ) இன்று முற்பகல் 2 மணியளவில் காலமானார். இவருடைய உடல், இன்று மாலை 5 மணி அளவில் அவரது சொந்தஊரான கர்லப்பாக்கத்தில் தகனம் செய்யப்பட உள்ளது. இதை தொடந்து இயக்குனர் பா.ரஞ்சித்தின் உடலுக்கு பலர் நேரிலும், சமூக வலைத்தளத்திலும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.