ரஜினிகாந்த் ஜோதிகா நடிப்பில்  வெளியான சந்திரமுகி திரைப்படத்தில் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு  விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது நடிகர்  ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர்  பி வாசு இயக்கத்தில் வெளிவந்த சூப்பர் டூப்பர் திரைப்படம்  சந்திரமுகி,  நடிகை ஜோதிகா தன்னுடைய அபார நடிப்பால் இப்படத்தை இமாலய வெற்றி அடைய வைத்தார் .  இந்த படம் சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்திருந்தது.  சென்னை சாந்தி திரையரங்கத்தில் சுமார் 800  நாட்களையும் கடந்து ஓடி சந்திரமுகி சாதனை படைத்தது. 

நிச்சயம்  சந்திரமுகி 2 உருவாகும் என முதல் பார்ட்லேயே  தெரிவிக்கப்பட்டிருந்த்து.   இந்நிலையில் சந்திரமுகி 2 திரைப்படத்தை  இயக்க எனக்கு ஆசை உள்ளது என ஏ.ஆர்  முருகதாஸ் கூறியிருந்தார் .  இந்நிலையில் இத்திரைப்படத்தின் இயக்குனர் வாசு அதிரடியாக  பேட்டி ஒன்று கொடுத்துள்ளார்.  அதில்  சந்திரமுகி 2 படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவது குறித்து  அவர் தகவல்  தெரிவித்துள்ளார் .  அதில் கூறிய ஆவர்,   சந்திரமுகி எதிர்பார்த்த அளவிற்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது.  இப்படத்தின் இரண்டாம் பாகத்தை நான் ஏற்கனவே கன்னடத்தில் ஆயுத ரட்சகா என்ற பெயரில் இயக்கிவிட்டேன். 

அந்தப்படம் கர்நாடகாவில் மிகப்பெரிய வெற்றி பெற்றது ,  இந்த படத்தின் கதையை ஒரு தமிழ் கதாநாயகனிடன் சொல்லியிருக்கிறேன்,   ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனத்திடமும் சொல்லிவிட்டேன்,  எல்லாம் தயாராக இருக்கிறது படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறோம் என அதிரடியாக தெரிவித்துள்ளார்.  சந்திரமுகி 2வில் ,  ரஜினிகாந்த் நடிக்கிறாரா இல்லையா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.