பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு 100 நாட்களை எட்டியதை படக்குழு ஆடிப் பாடி கொண்டாடி உள்ளது. அப்போது எடுத்த புகைப்படத்தை படத்தின் இயக்குனர் நெல்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்துள்ளார்.  

டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் பீஸ்ட். விஜய் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், யோகிபாபு, செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அதிரடி ஆக்ஷன் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வரும் இதில், நடிகர் விஜய் ராணுவ அதிகாரியாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டை ஒட்டி இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு 100 நாட்களை எட்டியதை படக்குழு ஆடிப் பாடி கொண்டாடி உள்ளது. அப்போது எடுத்த புகைப்படத்தை படத்தின் இயக்குனர் நெல்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் ஸ்டைலிஷ் லுக்கில் இருக்கும் நடிகர் விஜய் டிரம்ஸ் வாசித்த படி இருக்கிறார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Scroll to load tweet…