Asianet News TamilAsianet News Tamil

‘பிரில்லியண்ட் எக்ஸெலண்ட்’என்று பாராட்டிவிட்டு ஒரு வருடம் காக்கவைத்த நயன்தாரா...உடனே ஓகே சொன்ன டாப்ஸி

தான் அனுப்பிய 12 நிமிடக் குறும்படத்தைப் பார்த்துவிட்டு ‘பிரில்லியண்ட் எக்ஸெலண்ட்’ என்று பாராட்டிய நயன்தாரா என்னை ஒரு வருடத்துக்கும் மேலாக காக்கவைத்தார். அந்தக் கதையை சரியாகப் புரிந்துகொண்டு இந்தி,தமிழ்,தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் நடிக்க முன்வந்திருக்கும் டாப்ஸிதான் உண்மையான பிரில்லியண்ட் நடிகை என்று சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார் இயக்குநர் நந்தா பெரியசாமி.

director nanda periasamy blame nayanthara
Author
Chennai, First Published Aug 30, 2019, 5:41 PM IST

தான் அனுப்பிய 12 நிமிடக் குறும்படத்தைப் பார்த்துவிட்டு ‘பிரில்லியண்ட் எக்ஸெலண்ட்’ என்று பாராட்டிய நயன்தாரா என்னை ஒரு வருடத்துக்கும் மேலாக காக்கவைத்தார். அந்தக் கதையை சரியாகப் புரிந்துகொண்டு இந்தி,தமிழ்,தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் நடிக்க முன்வந்திருக்கும் டாப்ஸிதான் உண்மையான பிரில்லியண்ட் நடிகை என்று சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார் இயக்குநர் நந்தா பெரியசாமி.director nanda periasamy blame nayanthara

துவக்க காலத்தில் பத்திரிகையாளராகக் குப்பை கொட்டிய நந்தா பெரியசாமி  ஆர்யாவை வைத்து இயக்கிய ‘ஒரு கல்லூரியின் கதை’ மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார். அப்படம் படுதோல்வி அடையவே வேறு கோணத்தில் ‘மாத்தி யோசி’என்றொரு படம் இயக்கினார். முதல் படமே தேவலாம் என்கிற அளவுக்கு அந்த இரண்டாவது படம் இருக்கவே இண்டஸ்ட்ரி அவருக்கு ஒரு நீண்ட ஓய்வு கொடுத்தது. அதாவது 2010ல் ரிலீஸான மாத்தி யோசிக்குப் பிறகு கடந்த 9 வருடங்களாக படமின்றி தவித்து வந்தார். இந்நிலையில் பெரும் ஜாக்பாட்டாக அவர் எழுதிய கதை ஒன்று ‘ராஷ்மி ராக்கெட்’என்ற பெயரில் இந்தியில் டாப்ஸி நடிப்பில் துவங்கியிருக்கிறது. இதுகுறித்து தனது முகநூலில் பதிவிட்ட நந்தா பெரிய சாமி நயன் தாரா இதே கதைக்காக தன்னை ஓராண்டாகக் காக்கவைத்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார்.director nanda periasamy blame nayanthara

நந்தா பெரியசாமியின் பதிவு...டாப்சி நடிக்க utv நிறுவனம் தயாரிக்க என் கதை இந்தி மொழியில் இன்று முதல் RASHMI ROCKET என்ற பெயரில் படமாக்கப்படுகிறது.விரைவில் என் இயக்கத்தில் தமிழ் & தெலுங்கு மொழியில் Medal என்ற பெயரில் இதே படம் ஆரம்பமாக உள்ளது.உங்கள் மனதார ஆசிர்வாதங்களோடு.....நன்றி .. .. பின் குறிப்பு: 12 நிமிடம் ஓடக்கூடிய ஒரு demo filmஐ நயன்தாராவிற்கு கேமராமேன் ராம்ஜி சார் மூலம் அனுப்பி வைத்து brilliant & excellent என reply mail வந்து ...நீண்ட சந்திப்பிற்கு பிறகு இந்தக் கதையை நானே சொந்தமாக தயாரிக்கிறேன் என உறுதியளித்து...ஒரு வருடமாக காக்க வைத்து ...இன்று வரை பதில் சொல்லாத நயன்தாராவை விட டாப்சிதான் brilliant என எனக்கு தோன்றுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios