Mysskin : சிவகார்த்திகேயனின் 22-வது படத்தை மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்க உள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

டாக்டர், டான் என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த சிவகார்த்திகேயனுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அவர் நடிப்பில் தற்போது எஸ்.கே.20 திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தை அனுதீப் இயக்குகிறார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று ரிலீசாக உள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையடுத்து கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளார் சிவகார்த்திகேயன். இப்படத்தை ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க உள்ளார். இப்படத்திற்கு மாவீரன் என பெயரிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதன் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது.

இதற்கு அடுத்ததாக சிவகார்த்திகேயனின் 22-வது படத்தை மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்க உள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அப்படத்தின் வில்லன் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

அதன்படி பிரபல இயக்குனர் மிஷ்கின் இப்படத்தில் வில்லனாக நடிக்க கமிட் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் மிஷ்கின் தற்போது பிசாசு 2 படத்தை இயக்கி உள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

இதையும் படியுங்கள்... Rolex suriya : நடிச்சதே 5 நிமிஷம் தான்... அதுக்கே இவ்வளோ லவ்வா..! ‘ரோலெக்ஸ்’ கேரக்டர் குறித்து சூர்யா உருக்கம்