பொம்பள பிள்ளைய வைக்க வேண்டிய இடத்துல வைக்கணும்.. பெண் பிள்ளை வளர்ப்பு குறித்து முத்தையா சர்ச்சை பேச்சு..
பெண் பிள்ளையை பெண்ணாக தான் வளர்க்க வேண்டும். இதற்காக என்னை, நீங்கள் பழமைவாதி என்று சொன்னால், ஆம், நான் பழமைவாதி தான்” என இயக்குனர் முத்தையா பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
குட்டிப் புலி, கொம்பன், மருது, கொடிவீரன்,தேவராட்டம், புலிக்குத்தி பாண்டி போன்ற திரைப்படங்களை இயக்கிய முத்தையா தற்போது கார்த்தியை வைத்து விருமன் படத்தை முடித்துள்ளார். கொம்பன் படத்தை அடுத்து இரண்டாவது முறையாக இந்தக் கூட்டணி இணைந்துள்ளனர். இந்தப் படத்தை சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தயாரிக்கின்றனர். இந்தப் படத்தின் மூலம் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ள நிலையில் ப்ரோமோஷன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய முத்தையாவின் கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேடையில் பேசிய முத்தையா..
பெண் பிள்ளைகள் வளர்ப்பு பற்றி இயக்குநர் முத்தையாவின் சர்ச்சை பேச்சு. ”என் மகளை நான் ஒரு போட்டோ எடுக்க கூட விட மாட்டேன். அதை வைத்து தவறாக சித்தரித்து விடுவார்கள், பென் பிள்ளையை பெண்ணாக தான் வளர்க்க வேண்டும். இதற்காக என்னை, நீங்கள் பழமைவாதி என்று சொன்னால், ஆம், நான் பழமைவாதி தான்”. என்று பேசியுள்ளார்.