Asianet News TamilAsianet News Tamil

’வைகைப்புயல் வடிவேலு கோமா ஸ்டேஜில் இருக்கிறார்’...பகீர் ரகசியங்களை வெளியிடும் பிரபல இயக்குநர்...

நேசமணி ஹேஷ்டேக்குகள் பிரபலமானதை ஒட்டி கொஞ்சம் தெனாவெட்டாகப் பேட்டியளிக்க ஆரம்பித்த வைகைப் பயல் வடிவேலு இயக்குநர்கள் ஷங்கர், சிம்புதேவனையும், தயாரிப்பாளர் சங்கத்தையும் கடுமையான வார்த்தைகளில் வறுத்தெடுத்திருந்தார். இது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் ‘மூடர் கூடம்’, ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ படங்களின் இயக்குநரும் சிம்புதேவனின் உதவியாளருமான நவீன் பதிலுக்கு வடிவேலுவை விளாசியிருக்கிறார்.

director m.naveens tweets against actor vadivelu
Author
Chennai, First Published Jun 9, 2019, 10:28 AM IST

#NesamaniInComa மற்றும் #NesamaniStayInComa’ என்ற தலைப்புகளில் இரு  ஹேஷ்டேக்குகளை உருவாக்கி நடிகர் வடிவேலுவை மருத்துவமனையில் அட்மிட் பண்ணத் துடிக்கிறார் பிரபல இயக்குநர் எம்.நவீன்.director m.naveens tweets against actor vadivelu

நேசமணி ஹேஷ்டேக்குகள் பிரபலமானதை ஒட்டி கொஞ்சம் தெனாவெட்டாகப் பேட்டியளிக்க ஆரம்பித்த வைகைப் பயல் வடிவேலு இயக்குநர்கள் ஷங்கர், சிம்புதேவனையும், தயாரிப்பாளர் சங்கத்தையும் கடுமையான வார்த்தைகளில் வறுத்தெடுத்திருந்தார். இது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் ‘மூடர் கூடம்’, ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ படங்களின் இயக்குநரும் சிம்புதேவனின் உதவியாளருமான நவீன் பதிலுக்கு வடிவேலுவை விளாசியிருக்கிறார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "அண்ணன் வடிவேலு அவர்களின் நேர்காணல் பார்த்தேன். என் இயக்குநர் சிம்புதேவன் சாரை அவன் இவன் என்ற ஏகவசனங்களில் பேசியிருந்தார். சின்ன பையன், சின்ன டைரக்டர், பெருசா வேலை தெரியாத டைரக்டர் என்றெல்லாம் பிதற்றியிருந்தார். இவரை ஹீரோவாக வைத்து ஹிட் கொடுத்த டைரக்டரை ஏதோ இவரால்தான் புலிகேசி உருவானதுபோல் உடான்ஸ் விடுகிறார்.director m.naveens tweets against actor vadivelu

நான் ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்த்து வியந்த நடிகன் நீங்கள். நீங்கள் ஜீனியஸ்தான். ஆனால் நடிகனாக மட்டுமே. உங்களால் காமெடி ட்ராக் ரெடி பண்ண முடியுமே தவிர, ஸ்கிரிப்டை அல்ல. இவ்வளவு அகந்தை கூடாது.உங்களால்தான் புலிகேசி ஹிட் ஆனது என்றால் ஏன் அதற்குப் பிறகு நீங்கள் பெரும் பட்ஜெட்களில் கதாநாயகனாக நடித்து வெளியான எந்தப் படமும் செல்ப் எடுக்கவில்லை. அப்படி ஒரு படம் உங்களுக்குக் கொடுத்ததற்கு நீங்கள் இயக்குநர் சிம்புதேவன், இயக்குநர் ஷங்கர் இருவருக்கும் நன்றி சொல்ல வேண்டும்

புலிகேசி இன்டர்வெல் சீன்ல வி.எஸ். ராகவன் 'திரைக்கதையில் என்னதான் மாற்றம் செய்வது’ என்கிற வசனத்தையும் காட்சியையும் நீங்கள் கடுமையாக எதிர்த்தீர்கள். இந்த டயலாக் வந்துச்சுனா படம் பிளாப் என்றீர்கள். என் இயக்குநர் நம்பிக்கையோடு இதுதான் சீன் என்றார். வெற்றி பெற்றார்.23ஆம் புலிகேசி நான் உதவி இயக்குநராக வேலை செய்த முதல் படம். உங்கள் நடிப்பைப் பார்த்து வியந்ததைப் போல என் இயக்குநரின் புதிய சிந்தனைகளையும் எழுத்தையும் பார்த்து வியந்து வேலை செய்தேன். நீங்கள் புரூடா விடுவதுபோல் அவர் எடுப்பார் கைப்பிள்ளை இல்லை. சுயம் கொண்ட இயக்குநர்.

வடிவேலு என்னும் மகா கலைஞனை நான் என்றும் வியந்து ரசிப்பேன். அதன் காரணமாக உங்கள் அகந்தையைப் பொறுத்தும் கொள்வேன். ஆனால், என் இயக்குநர் சிம்புதேவன் சார் மற்றும் நான் பெரிதாக மதிக்கும் இயக்குநர் ஷங்கர் சார் பற்றி மரியாதைக் குறைவாகப் பேசுவதைக் கண்டிப்பாக ஏற்க முடியாது. புலிகேசி படப்பிடிப்புக்கு முன்பே அதன் பவுண்ட் ஸ்கிரிப்ட் (bound script) படித்துப் புல்லரித்து போனவன் நான். நீங்கள் கருத்து கரெக்‌ஷன் சொன்னால் மரியாதைக்காகச் சிரித்தபடி அமைதியாக இருப்பார் எங்கள் இயக்குநர். ஆனால், கதையை மாற்றியதில்லை.

24ஆம் புலிகேசி எனும் படம் வராமல் இருப்பது என்னை போன்ற ரசிகர்களுக்கும் தமிழ் சினிமாவுக்கும் இழப்பே. அதற்குக் காரணம் உங்கள் அகந்தை என்றால் அந்த ஆணவத்தையும் அகந்தையையும் ரசிகனாகவும், சிம்புதேவன் சாரின் அசிஸ்டென்ட்டாகவும் நான் கண்டிப்பேன்" என்று அவர் கூறியிருந்தார். நேசமணி தொடர்பான பதிவிகள் போலவே இயக்குநர் நவீனின் பதிவும் தற்போது வைரலாகத் துவங்கியுள்ளது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios