Asianet News TamilAsianet News Tamil

மீண்டும் கார்த்தியுடன் கை கோர்க்கும் 'மாஸ்டர்' பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தன்னுடைய முதல் படமான 'மாநகரம்' படத்தை மிகவும் வித்தியாசமாக இயக்கி ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர். இந்த படத்தை தொடர்ந்து இவர் நடிகர் கார்த்தியை வைத்து இயக்கிய, 'கைதி' திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
 

director lokesh kanagaraj again join with karthi
Author
Chennai, First Published Jun 19, 2020, 2:52 PM IST

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தன்னுடைய முதல் படமான 'மாநகரம்' படத்தை மிகவும் வித்தியாசமாக இயக்கி ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர். இந்த படத்தை தொடர்ந்து இவர் நடிகர் கார்த்தியை வைத்து இயக்கிய, 'கைதி' திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும், ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய திறமையை நிரூபித்து வந்த லோகேஷ் கனகராஜ் தன்னுடைய மூன்றாவது படத்திலேயே, தளபதி விஜயுடன் இணைந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த படம், ஏப்ரல் 9 ஆம் தேதியே வெளியாக இருந்த நிலையில், கொரோனா வைரஸ் பிரச்சனை காரணமாக தற்போது போடப்பட்டுள்ள ஊரடங்கால் படம் ரிலீஸ் ஆவதில் சிறு தாமதம் ஏற்பட்டுள்ளது.

director lokesh kanagaraj again join with karthi

இந்நிலையில் அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்க,  கமல்ஹாசன் தயாரிக்கவுள்ள ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியானது.  ஆனால் தற்போது இந்த படத்தின் பணிகள் திட்டமிட்டபடி துவங்க முடியாத சூழல் உள்ளதால்  2021 ஆம் ஆண்டு துவங்க உள்ளதாக கூறப்படுகிறது.

director lokesh kanagaraj again join with karthi

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ்  இயக்கத்தில் கார்த்தி நடிக்க உள்ள படத்தை இயக்க திட்டமிட்டு வருவதாகவும், இது கைதியின் இரண்டாம் பாகமாக இருக்குமா? என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும் விரைவில் இந்த படம் குறித்த அதிகார பூர்வ தகவலும் வெளியாகும் என கூறப்படுகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios