நடிகர் பிரஷாந்த் நீண்ட இடைவெளிக்கு பின், சூப்பர் ஹிட் வெற்றி படத்தை கொடுக்க வேண்டும் என்கிற முனைப்பில் தற்போது, பாலிவுட் திரையுலகில் மிகப்பெரிய வெற்றி பெற்று, பல விருதுகளை தட்டி தூக்கிய 'அந்தாதூன்' படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் செய்திகள்: ஐஸ்வர்யா ராஜேஷ் அம்மா இவங்களா..? இதுவரை பார்த்திடாத பிறந்தநாள் ஸ்பெஷல் ரேர் போட்டோ கேலரி!
 

புத்தாண்டை முன்னிட்டு இந்த படத்தின் டைட்டில் ’அந்தகன்’ என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். கொரோனா தாக்கதம் தற்போது சற்று தனித்துள்ளதாலும், படப்பிடிப்பு நடத்த மத்திய மற்றும் மாநில அரசு அனுமதி கொடுத்துள்ளதாலும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்குவதற்கான ஏற்பாடுகள் படு தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த படத்தை நடிகை ஜோதிகா நடித்த ’பொன்மகள் வந்தாள்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஜேஜே பெடரிக் இயக்க உள்ளார்.  சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகவுள்ள இந்த படத்தில் முக்கிய வேடத்தில் சிம்ரன் நடிக்கிறார்.

மேலும் செய்திகள்:  கண்ணாடி பதித்த கவர்ச்சி உடையில்... காருக்குள் அமர்ந்து கன்னா பின்னா போஸ்..! கிக் ஏற்றிய யாஷிகா ஆனந்த்..!
 

இந்த படத்தில் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள் குறித்த தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வரும் நிலையில் தற்போது இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து, முத்து, படையப்பா, லிங்கா ஆகிய படங்களையும், பல நடிகர்களை இயக்கிய சூப்பர் ஹிட் பட இயக்குனருமான கே.எஸ்.ரவிக்குமார் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.

பிரஷாந்த் நடிக்கும் இந்த படத்தை அவரது  தந்தை தியாகராஜன் தயாரிக்க உள்ளார். நீண்ட நாட்களுக்கு பின், சூப்பர் ஹிட் கதையில் நடிக்கும் பிரசாந்தின் 'அந்தகன்' படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.