பல கஷ்டங்களை கடந்து... 'ழகரம்' படத்தை இயக்கி முடித்த இளம் இயக்குனர் க்ரிஷ்..!

First Published 15, Jun 2018, 6:56 PM IST
director krishna direct zhagaram movie
Highlights
director krishna direct zhagaram movie


'ழகரம்' திரைப்படத்தின் மூலம் இயகுரனாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார் க்ரிஷ். ஒரு திரைப்படத்தை எடுத்து முடிக்க தான் எத்தனை சோதனை. எப்படியோ இந்த படத்தின் படப்பிடிப்பை பல கஷ்டங்களை கடந்து, எடுத்து முடித்து போஸ்ட் ப்ரோடக்ஷன் பணியில் தீவிரம் காட்டி வருகிறார். 

முதல் படத்தையே, 'அரிமா சக்தி விருதும்' 'ஈரோடு தமிழ் சங்கத்தின் சிறந்த நாவல் விருதும்' பெற்ற 'ப்ராஜக்ட் ஃ' நாவலை தழுவி எடுத்துள்ளார்.

இந்த திரைப்படம் ஓர் அதிசயப் புதையலைத் தேடிச்செல்லும் 21ம் நூற்றாண்டு இளைஞர்களின் சாகசக் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. 

தற்போதைய காலத்தில், படித்த இளைஞர்களுக்குப் பரிச்சயமான மென்பொருள்துறை கார்ப்பொரேட் சூழலில் பரபரவென்று தொடங்கி, வரலாற்று சின்னங்களாக விளங்கும் மகாபலிபுரம், தஞ்சை, கோவை என்று பல்வேறு ஊர்களுக்கு இழுத்துச் செல்கிறது. 

இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் நந்தா நடித்துள்ளார். சிறு இடைவெளிக்கு பின் மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் நந்தாவிற்கு இந்த திரைப்படம் திருப்பு முனையாக அமையும் என்று கூறப்படுகிறது.  

படத்தின் இடையிடையே தற்போதைய இளைஞர்களுக்கு தெரியாத பல ருசிகரமான, ஆச்சரியமான வரலாற்று விபரங்கள் கதையும்  கூறி ஆச்சர்யப்படுத்தியுள்ளார் இயக்குனர். 'அடுத்து என்ன நடக்கப் போகிறது?' என்று ஒவ்வொரு நிமிடமும் நம்மை கொக்கி போட்டு இழுத்துச் செல்கிறது கதை. 

சமீபத்தில் இந்த படத்தின் முதல் பார்வையை இயக்குனர், விஜய் மில்டன் வெளியிட்டார். விரைவில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

loader